#சவூதி அரேபியா, #சிரியாவில் 47 நிபுணத்துவம் வாய்ந்த சவூதி மருத்துவர்களின் பங்கேற்புடன் ஒரு சிறப்பு மருத்துவ முகாமை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
ராஜ்ஜியத்தின் மனிதாபிமான மருத்துவப் பங்களிப்பை வெளிப்படுத்தும் இந்த முகாமின் மூலம், ஒரே வாரத்தில் எட்டப்பட்ட மிகப்பெரிய மருத்துவ சாதனைகள் பின்வருமாறு:
- சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள்: 491 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர்.
- செயற்கை உறுப்புகள்: தேவையுடைய நோயாளிகளுக்கு 60 செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டன.
- உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy): 184 சிகிச்சை அமர்வுகள் நடத்தப்பட்டன.
- சிறுநீரகப் பாதை அறுவை சிகிச்சை: 199 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
- குழந்தைகள் அறுவை சிகிச்சை: 103 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
- கருவிழி மாற்று அறுவை சிகிச்சை: 60 கருவிழி (Cornea) மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
- கண்புரை அறுவை சிகிச்சை: 321 கண்புரை (Cataract / المياه البيضاء) நீக்கும் அறுவை சிகிச்சைகள் நிறைவேற்றப்பட்டன.






