ஈரானிய ஆதரவு குழுக்களின் செயலுக்கு சவூதி வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம்!**
ஈராக்கிலிருந்து ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்களால் சவூதி அரேபியாவைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் (ஆளில்லா விமான) தாக்குதல்களுக்கு சவூதி அரேபியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ![]()
![]()
தனது நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்க உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள சவூதி அரேபியா, இத்தகைய தாக்குதல்கள் உருவாகும் மூல இடங்கள் மீது பதில் நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை தனக்கு உள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ![]()
![]()
அத்துடன், தனது நிலப்பரப்பை இவ்வாறான தாக்குதல்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், அதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஈராக் அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் சவூதி வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது. ![]()
![]()
#SaudiArabia#MinistryOfForeignAffairs#Security#Sovereignty#MiddleEast#SaudiForeignPolicy






