
பலஸ்தீனப் பிரச்சினையில் தொடர்ச்சியாக மீறப்படும் சர்வதேச சட்டங்கள் மனித உரிமை மீறல்கள் காஸா மக்களின் மீது தொடர்சியாக ஆக்கிரமிப்பு படைகளால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்களை நிறுத்த உடனடியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஸவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பர்ஹான் பின் பைஸல் தெரிவித்தார்கள்.
பலஸ்தீன விவகாரம் தொடர்பில் கூட்டப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அவசர கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.