



காஸா மக்களின் துயர் துடைக்க அனைத்து வழிகளிலும் முயற்சித்துவரும் மன்னர் ஸல்மான் நிவாரணம் மையம் வழங்கும் நிவாரணப் பொதிகளை சுமந்த 59ஆவது விமானமும் அல் அரீஸ் விமான நிலையத்தை சென்றடைந்தது.
7.5டொன் உணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்காக இவ்விமானம் கொண்டு சென்றுள்ளது இதுவரை 7538டொன் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்காக மன்னர் ஸல்மான் நிவாரண மையத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 8கப்பல்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதுடன் சுகாதாரத் தேவைகளுக்காக 20அம்பியுலன்ஸ் வன்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச ரீதியாக நிவாரண அமைப்புக்களுடன் 150மில்லியன் ரியால்களுக்கு 4 ஒப்பந்தங்களை ஸவுதி அரேபியா செய்துள்ளது. இவை பலஸ்தீன அகதிகளின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்வதற்கான முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணொளியினை பார்வையிட…