பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் சவுதி தேசிய நிவாரணப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) காஸாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் மிகவும் தேவைப்படும் மக்களுக்கு 24,800 சூடான உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது.
கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பலஸ்தீனக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களுக்குத் தொடர்ந்து உறுதியான ஆதரவளிக்கவும் சவுதி அரேபியா மேற்கொண்டு வரும் தீவிரமான மனிதாபிமான முயற்சிகளின் தொடர்ச்சியாகவே இந்த அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.






