ஸவுதி அரேபியா முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அதிகம் உதவிய ஒரு நாடு அது தனக்கென ஒரு கொள்கையை வகுத்துள்ள தனது நாட்டை முதல் நிலைப்படுத்தி அடுத்தவர்களுக்கு தன்னால் முடியுமானதை செய்கின்றது. அடுத்தவர்களின் கூச்சலுக்கு அது அஞ்சுவதில்லை விமர்சனங்களை தாங்குகிறது பரிசீலித்து நல்லவற்றை எடுத்துக்கொள்கின்றது. பொருத்தமற்றவற்றை தூர எறிந்துவிடுகின்றது ஆனால் விமர்சிப்பவர்களை அது எறிவதில்லை. அனைவருக்கும் அது நலவையே பிரதி உபகாரமாகக் கொடுக்கிறது கெடுவார் கேடு நினைப்பார் என்பதைப் போல அதன் நல்ல சிந்தனைகளையும் போக்கையும் தெரிந்துகொள்ளாது அதற்கு எதிராக சதி செய்தவர்கள் அனைவரும் தோற்றுப்போனார்கள் பின்னர் அதனிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தற்போதய ஈரான் அதற்கு நல்ல சான்று.. ஒபாமாவின் ஆட்சியில் ஈரானுக்கு பிராந்தியத்தில் பெரும் பலத்தை உருவாக்க முழு முயற்சி எடுக்கப்பட்டது. நாங்கள் ஸவுதியை குப்பையில் போடுவோம் என்றார் பைடன் ஆனால் மக்கள் அவரை குப்பையில் போட்டார்கள்… ஆயுதம் தரமாட்டோம் என்றார்கள்… ஸவுதி பல நாடுகளிடமிருந்து ஆயுங்களைப் பெற்றது பின்னர் நாங்கள் தருகிறோம் என்றது அமெரிக்கா. நாங்கள் இல்லாமல் ஸவுதியால் இரு வாரங்களுக்கு தாக்குபிடிக்க முடியாது என்றார் ட்ரம்ப். நீங்கள் உருவாவதற்கு முன்னிருந்தே பல போராட்டங்களைக் கண்டு வெற்றி பெற்று உறுதியானவர்கள் நாங்கள் என்றார் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் நீங்கள் ஆயுதம் தர மறுத்தால் நாங்கள் ஆயுதங்களை உற்பத்தி செய்வோம் பிற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்வோம் என்றார், இறங்கி வந்தார் ட்ரம்ப் நாங்கள் ஸவுதியுடன் வியாபார ஒப்பந்தங்களை புதுப்பிக்கிறோம் என்றார்…
ஆக, இக்காலத்தில் காய்க்கும் மரங்களே கல்லெறி படுகின்றன ஆனால் அவை கல்லெறிந்தவர்களுக்கு பழங்களையே கொடுக்கின்றன என்ற கூற்றுக்கு மிகப்பொருத்தமான நாடாக ஸவுதியே காணப்படுகின்றது.








