ஸவுதி பலஸ்தீன் உறவில் விரிசலை ஏற்படுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் அல்லது விமர்சிக்கும் ஒவ்வொருவரும் கடுமையாக அடக்கப்படுவார் என பாகிஸ்தானின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது..
பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறியபோது அப்போதய பிரதமர் நவாஸ் ஷரீபுடன் நானும் ஸவுதிக்கு சென்றிருந்தேன். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது அந்த நேரத்தில் மன்னர் அப்துல்லாஹ் (அல்லாஹ் அவரின் கப்ரை விசாலப்படுத்துவானாக) பிரதமரின் கையைப் பிடித்து உயர்த்தி நீ என் சகோதரன் என்றார். பின்பு இல்லை இல்லை நீ என் உற்ற சகோதரன் என்றார். பாருங்கள் ஸவுதி மன்னர் எவ்வளவு தூரம் பாகிஸ்தான் தலைவர்களை நேசித்திருக்கிறார்கள் என்று.
நவாஸ் ஷரீப் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார் பாகிஸ்தான் அணு ஆயுத பரிசோதனையினை செய்தபோது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது அந்த நேரம் ஸவுதி பாகிஸ்தானுக்கு இலவசமாக எரிபொருளை வழங்கியது. பின்பு இன்னும் உதவியை அதிகரித்தது. நவாஸ் ஷரீப் இரண்டாவது தடவையாக பாகிஸ்தானின் தலைவராக தேர்வு செய்யப்பட்டபோது 1.5பில்லியன் டொலர்களை இலவசமாக பாகிஸ்தானுக்கு கொடுத்தது. தற்போதும் மன்னர் ஸல்மான் முழு கௌரவத்தையும் பாகிஸ்தானுக்கு வழங்குகின்றார். பாகிஸ்தானிலே முதலீடு செய்யுமாறு அவர் தூண்டினார் தற்போதும் நாம் பல பில்லியன் டொலர்களுக்கான பல ஒப்பந்தங்களை ஸவுதியுடன் செய்துள்ளோம். சொற்ப காலத்திற்கு முன்னால் ஸவுதியின் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் விஜயம் செய்தபோது பல நன்மைகளை அடைந்தோம் பல பில்லியன் கடன்களை ஸவுதியின் உதவியால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றோம்.
எனவே, இவ்வாரான ஒரு நண்பனுக்கு எதிராக நீ நச்சுக்கருத்துக்களை பரப்புவாயாக இருந்தால் அது மன்னிக்க முடியாததோர் குற்றமாகும். என்றார்.








