கடார் ரேடார்களால் சுற்றி வழைக்கப்பட்ட நாடு அமெரிக்க பாதுகாப்பு அதி உச்ச திறன்கள் கொண்ட கருவிகள் ஊடாக பெருஞ் செலவில் அது தன்னைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது இதனால் ஈரானினால் அடிக்கப்பட்ட அதிகமான ஏவுகனைகள் தடுக்கப்பட்டன. ஆனாலும் இஸ்ரேல் தாக்கியபோது இவை எதுவும் வேலை செய்யவில்லை. எனவே, ஏற்கனவே அறியப்பட்ட திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதலாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் பலரால் முன்வைக்கப்படுகின்றது.
இதேபோன்றுதான் ஒக்டோபரில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலும் அமைந்துள்ளது. இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடைப்பட்ட பகுதி மூன்று அடுக்கு பாதுகாப்பு முறைகளால் பாதுகாக்கப்படுகின்றது. ஒன்று ராடார் முறை, இரண்டு குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சத்தம் எழுப்பும் கருவிகள் அந்தப் பகுதியில் எவராவது நுழைந்தாலோ அல்லது தாண்டினாலோ அவை சத்திமிட ஆரம்பித்துவிடும். மூன்றாவது செடலைட் ஊடாக எந்நேரமும் எல்லைப் பாதுகாப்பை அவதானிக்கிறது இஸ்ரேலிய இராணுவம். அதற்கும் மேலாக எவராவது எல்லையைத் தாண்டினால் அவர்களை இடையில் மறித்து முடிப்பதற்பதற்கான பிராந்தியமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் தாக்குதலின்போது இவை அனைத்தும் செயலிலக்கச் செய்யப்பட்டிருந்தது. இங்குதான் பலத்த சந்தேகம் நிலவுகின்றது. இஸ்ரேல் ஏற்கனவே திட்டமிட்டிருந்த தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள ஈரானின் ஊடாக ஹமாஸை ஏமாற்றி போராட்டத்திற்கான நியாயத்தை தேடிக்கொண்டதா? என்ற பலமான சந்தேகம் நிலவுகின்றது.
இந்த வகையில் கடார் தாக்குதலுக்கும் ஒக்டோபர் தாக்குதலுக்கும் இடையில் பெருத்த உடண்பாடுகள் இருப்பதாகவே தோன்றுகின்றது.








