இஸ்ரேல் எப்படியாவது ஒரு இஸ்லாமிய நாட்டிடமிருந்து தான் அடி வாங்க வேண்டும் என்று விரும்புகின்றது. அதுவே தற்போது அது உலகளவில் எதிர்க்கொண்டிருக்கும் அரசியல் ரீதியான எதிர்ப்புக்களுக்கு ஒத்தடம் போடக்கூடியதாக அமையும்…
கடாருக்கு எதிரான தாக்குதலின்போது இஸ்ரேலைக் கண்டித்த ட்ரம்ப் இஸ்ரேல் அரசியல் ரீதியாக இதன் விளைவுகளை சந்திக்கும் என்று கூறியிருந்தார் தற்போது இஸ்ரேல் மிகப் பெரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கின்றது.
இஸ்லாமிய நாடுகள் ஏதாவது ஒன்றிலிருந்து ஒரு சிறிய தாக்குதல் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்றாலும் உலகத்தின் பார்வையை இஸ்ரேல் தனக்கு சார்பாக ஈர்த்துக்கொள்ளும்… உலகின் பெரும்பான்மையான வல்லரசுகள் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக திரும்பும் இதையே அங்குமிங்கும் சீண்டி இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது…
தற்போதய இஸ்லாமிய நாடுகளின் புத்திசாலித்தனமான நகர்வுகள் சில இளப்புக்களை சந்தித்தாலும் தொடர்ந்து பாதுகாக்கப்படல் வேண்டும் இதுவே, இஸ்ரேலை தொடர்ந்து உலகளவில் தனிமைப்படுத்துவதற்கான வளியாகும்.
தற்போது முஸ்லிம் அல்லாத நாடுகளே இஸ்ரேலுக்கு எதிரான தடைகளை விதிக்க ஆரம்பித்து விட்டன தேன் குடம் நிறம்பும்போது பொல்லால் அடித்து உடைத்துவிடக் கூடாது…








