ஒக்டோபர் தாக்குதல் பருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு தாக்குதலாகும் பெரும் ஒரு திட்டத்திற்கும் பிராந்தியத்தை வேட்டையாடுவதற்குமான துவக்கப் புள்ளியாக வலிந்து இது இஸ்ரேலினால் உருவாக்கப்பட்டதா? என்ற சந்தேகம் பரவலாக இருந்து வந்ததும் அதை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்ரேலின் உரைகள் இருந்ததும் அவதாணிக்கப்பட்ட ஒன்றுதான்.
இந்த தாக்குதலை ஈரானுக்கும் தனக்கும் இருந்த கல்லத் தொடர்பை பயன்படுத்தி ஈரானின் மூலம் ஹமாஸை ஏமாற்றி யுத்தத்திற்கான நியாயங்களை இஸ்ரேல் உருவாக்கிக் கொண்டதுடன் அடுத்த நாடுகளையும் இதற்குள் இழுத்துவிடும் வகையில் ஹமாஸினால் பிடிக்கப்பட்ட பனயக் கைதிகளில் வெளிநாட்டவர்களையும் சேர்த்துவிட்டது. இது சற்று குழப்பமாக இருப்பினும். இது காலம் செல்லச் செல்ல துளாம்பரமாகும் என்பது மாத்திரம் உண்மை.
அண்மையில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வெளியிட்ட அறிக்கை இதை இன்னும் உறுதிப்படுத்துகின்றது. அவ்வறிக்கையில் ‘‘நாங்கள் விரும்பினால் ஈரான் மற்றும் எமனுடன் கூட்டுச் சேர்வோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இது இந்த நாடகத்தின் உண்மைகள் வெளிப்படுவதற்கான துவக்கப்புள்ளியாக இருக்க முடியும்.








