மன்னர் ஸல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான பணிகளுக்கான மையம், ஏமன் குடியரசிற்கு சவூதி அரேபியாவின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 100 டன் பேரீச்சம்பழங்களை கையளித்தது.
சர்வதேச அளவில் சவூதி அரேபிய இராச்சியம் முன்னெடுத்து வரும் மனிதாபிமான உதவிகளின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் உள்ள தேவையுடைய குடும்பங்களுக்கு விநியோகிக்கும் பொருட்டு, அந்த நாட்டு அதிகாரிகளிடம் இந்த பேரீச்சம்பழங்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
மன்னர் ஸல்மான் நிவாரண மையத்தின் ஊடாக வழங்கப்பட்ட இந்த மனிதாபிமான பங்களிப்பு, ஏமன் மக்களுடனான சவூதியின் நீண்டகால உறவையும் ஆதரவையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.






