அண்மையில் பாகிஸ்தானுக்கும் ஸவுதிக்கும் இடையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒப்பந்தம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவு சிக்கலான கால கட்டத்திலும் ஸவுதியின் நிதாணமான அணுகுமுறைகள் அரசியலிலும் இராஜ தந்திரத்திலும் அதனிடமிருந்து அடுத்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய பக்கங்கள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
இந்த அதிர்ச்சி தொடர்பில் பலரும் பலவிதமாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக எமனை ஸவுதி தாக்கியபோது ஸவுதி தன்னுடன் இது தொடர்பில் எந்த ஆலோசனையையும் பெறவில்லை என்று அறிவித்த அமெரிக்கா பின்னர் ஸவுதியின் தாக்குதலை அங்கீகரிப்பதாகவும் அதற்கு தேவையான உதவிகளைச் செய்வதாகவும் முன்வந்தது.
ஆக ஸவுதி எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்த ஒரு நாடு அதன் பாதுகாப்பு சிவப்புக் கோடு எந்தக் கொம்பனாலும் அதன் பக்கத்தில் கூட செல்ல முடியாது எந்த வல்லரசாலும் அதன் ரகசியங்களை எளிதில் தெரிந்துகொள்ள முடியாது அது எவரும் எதையும் அறிவித்துவிட்டுச் செய்வதில்லை. செய்வதை முறையாக உரிய நேரத்தில் செய்கிறது…








