அரசியல், மார்க்க தலைமைகளுக்கு பஞ்சமில்லாத நாடு ஸவுதி அரேபியா, அவர்கள் பேசுவது மிகவும் குறைவு செயலாற்றுவது அதிகம். பேசுவதையே செய்வார்கள், பேசுவதையே செய்வார்கள். உள்ளொன்றும் வெளியிலொன்றும் அவர்களது அரசியலில் இல்லை அதனால் உலக நாடுகள் அவர்கள் மீது நம்பிக்கையும் மதிப்பும் கொண்டுள்ளது. பரம எதிரி நாடுகளும் ஸவுதியின் மத்தியஸ்தம் என்றால் நாங்கள் பேசத் தயார் என அறிவிக்கின்றன நீண்ட காலம் பிரச்சினைப்படும் குழுக்கல் நாங்கள் ஸவுதியை மாத்திரமே மத்தியஸ்தத்திற்கு ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் மீதான மதிப்பும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புக்களும் உலகளவில் அதிகரித்துள்ளன.
பொதுவாக ஸவுதியின் மன்னர் தங்களின் கடைசிக் காலத்திலேயே பொறுப்பை ஏற்பார்கள் ஆனால் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் மிகவும் இளம் வயதில் மன்னரின் ஆலோசகர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர், பட்டத்து இளவரசர் என பல்வேறு பொறுப்புக்களை சுமந்து பெரும் பங்காற்றி வருகின்றார்.
ஸவுதியை யுத்த மேகம் சூழ்ந்திருந்த காலத்தில் ஸவுதியின் பாதுகாப்பை தன் தலையைாய கடமையாக ஏற்றார் ஸவுதியில் எக்காரணத்திற்காகவும் யுத்தம் நடக்காது என்றார் எதிர் நாடுகள் ஸவுதியின் எண்ணை வளத்திலும், அதன் நிலத்திலும், புனிதஸ் தளங்களை பரிமாரிப்பாதிலும் பங்குபோட்டுக் கொள்ள கற்பனை செய்துகொண்டிருந்த நேரம் அனைவர் ஆசையிலும் மண்ணைத் தூவி ஸவுதியை போராட்டத்திலிருந்து மீட்க்க இரவு பகலாக உழைத்தார்.
மேற்கத்தேய நாடுகள் எதிலும் படிக்காத மன்னர் ஸுஊத் பல்களைக்கழகத்தின் பட்டதாரியான அவரின் நகர்வுகள் மேற்கத்தேய நாடுகளை அவரிடம் பிச்சை வாங்க வைக்கும் அளவுக்கு தள்ளிவிட்டது. தன் தந்தை வரலாற்று நூல்களையும் அதிகம் என்னை வாசிக்கத் தூண்டினார் என்று சொல்லும் அவர் இளம் வயதிலேயே நாடுகள், குழுக்கள், அவற்றுக்கிடையிலான உறவுகள், உள்ளக முன்னேற்றம், சிறந்த மக்கள் சேவை என்று அனைத்திலும் சிறப்புற்று விளங்குவதுடன் துள்ளியமாக செயற்படுகின்றார்.
ஸவுதியின் பொருளாதாரம், கல்வி, கைத்தொழில், உட்கட்டுமானம் என்று உலகை வியக்கச் செய்யும் அளவு அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்திற்காக பாதைகளை வடிவமைத்தார். இஸ்லாமிய சட்டவாக்கத்துறையை சிறப்புத் துறையாகப் பயின்ற அவர் தீவிர இஸ்லாமிய செயற்பாட்டளர்களின் சில விமர்சனங்களையும் தாண்டி சிலவற்றில் விட்டுக்கொடுப்புக்கள் செய்தால்தான் சிலதை அடையலாம் என்ற நோக்கில் பயணிக்கிறான். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப முன்னேற்றங்களை முறையாக முன்னெடுக்கின்றார்.
பொதுவாக அரேபியர்கள் அவர்களை சீண்டுவதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு அது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஸவுதி இனி எவருக்கும் எதற்கும் அடிமை அல்ல அடுத்தவர்களை நம்பி வாழும் நாடாக ஸவுதி இருக்காது அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்ட அடுத்தவர்கள் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற நாடாக மாறும் என்ற கொள்கையில் உறுதியாக பயணிக்கிறார். 2030ஆம் ஆண்டாகும் போது ஸவுதி அரேபியா அடுத்த பெற்றோலிய வழத்தில் மாத்திரம் தங்கியிருக்காது தனது உற்பத்திகள், கண்டுபிடிப்புகளில் தங்கியிருக்கும் நாடாக மாறும் இது எனது தனிப்பட்ட போராட்டம் அந்த நிலையில் ஸவுதியையும் மத்திய கிழக்கையும் காணாமல் என் உயிர் பிரிவதை நான் விரும்பவில்லை என்ற அறிவிப்புடன் உறுதியாக செயற்படுகின்றார்.
அல்லாஹ் அவரது ஆயுளிலும் நகர்வுகளிலும் பரகத் செய்வானாக.








