ஈரான் மீது வாஷிங்டன் புதிய தடைகளை விதித்தது
அண்மையில் கையெழுத்திட்ட பல தடைகளைத் தொடர்ந்து, ஈரான் தொடர்பாக அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க திறைசேரி அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபை ஈரானுக்கு எதிரான தடைகளை ‘ட்ரிகர் மெக்கானிசம்’ (Trigger Mechanism) வழியாக மீண்டும் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, காலதாமதமின்றி அமெரிக்காவுடன் இராஜதந்திரப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு தெஹ்ரானுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஈரான் தனது அணுசக்தி கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றத் தவறியதாலேயே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின்படி தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்று ரூபியோ கூறினார்.






