இஸ்ரேல் ஒரு சிறிய நாடு, யுதர்கள் பல்வேறு அடக்குமுறைகளைத் தாண்டி வந்தவர்கள் உலகில் அநியாயமிளைக்கப்பட்டு அனைவராலும் ஒடுக்கப்பட்ட ஒரு சிறிய கூட்டம் இதுவே உலகத்தாரையும் உலக நாடுகளையும் இஸ்ரேல் ஏமாற்றிய தாரக மந்திரம், தங்களை அநியாயம் இழைக்கப்பட்டவர்களாகக் காட்டி அநுதாப அலைகளைத் தேடுவது அவர்களின் கைவந்த கலை… ஆனால், இன்று நிலமை மாறிவிட்டது. இஸ்ரேல் உலகிற்கு தன் கோர முகத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது… முழுப் பிராந்தியத்தையும் அச்சுருத்தலுக்குள்ளாக்கும் ஒரே நாடு இஸ்ரேல்தான் என்பதை உலகத் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். உலகத் தலைவர்கள் இதை உணர மறுத்தால் அவர்கள் தங்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்ற நிலை தோன்றியிருக்கின்றது அல்-ஹம்துலில்லாஹ்.
பலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு இஸ்ரேலால் நீண்ட காலமாக துன்புற்று வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், ஒவ்வொரு முறையும் பலஸ்தீனை ஆக்கிரமிக்க அது முனையும்போது அதற்கான ஏதோவொரு நியாயத்தை ஏற்படுத்திக் கொள்கிறது அடுத்தவர்களிடமிருந்து தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டதும் மூர்க்கத்தனமாகத் தாக்கி தனது இலக்குகள் நிறைவடைந்ததும் அடுத்தவர்களின் அனுதாபங்களைப் பெற்று போராட்டத்தை நிறுத்திக் கொள்ளும் தனது நிலையை சர்வதேச ரீதியாக பாதுகாத்துக் கொள்ளும் இதுவே தொடர்ந்தும் நடந்துவந்த சேட்டை இதை ஸவுதி மிகத் தெளிவாகப் புறிந்துகொண்டது. குறிப்பாக உலகத் தலைவர்களிடம் உண்மைகளையும் நிரந்தர சமாதானத்திற்கான நேர்த்தியான தீர்வையும் கொண்டு சேர்ப்பதில் வெற்றியடைந்துள்ளது.
இது இஸ்ரேலுக்கு அரசியல் ரீதியாக மிகவும் இறுக்கமான காலம். பலஸ்தீன மக்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக…








