Duchy of Luxembourg ஸவுதி, பிரான்ஸினால் முன்னெடுக்கப்படும் பலஸ்தீன சுதந்திர நாட்டுத் தீர்மாணத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது இது இஸ்ரேலின் தலைவலியை அதிகரித்துள்ளது இம்மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள பலஸ்தீன் தொடர்பான மாநாட்டுக்கு வலுச் சேர்த்துள்ளது. அரசியல் ரீதியாக உலகளவில் இஸ்ரேல் நாளுக்கு நாள் ஒதுக்கப்படுவது சதியும் அநியாயமும் நிலைக்காது என்பதை உலகிற்கு இன்னொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் விருப்பத்தை லக்சம்பர்க் கிராண்ட் டச்சி (Duchy of Luxembourg) அறிவித்ததை சவுதி அரேபியா வரவேற்பதாக அதன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நேர்மறையான நடவடிக்கை இரு நாட்டுத் தீர்வை செயல்படுத்துவதற்கும் அமைதியை அடைவதற்குமான பாதையை இன்னும் விசாலப்படுத்தியுள்ளதாக ஸவுதி உறுதிப்படுத்தியது, பாலஸ்தீன அரசை நியாயமான மற்றும் விரிவான அமைதியை அடையும் வகையில் அங்கீகரிக்க இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து பங்காளிகளுக்கும் தனது அழைப்பை மீண்டும் ஸவுதி வலியுறுத்தியுள்ளது.
https://www.spa.gov.sa/N2398788








