எவருக்கும் அறிவிக்காது ரகசியமான முறையில் திட்டமிட்டு இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான பாகிஸ்தானுடன் இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது மறைந்த மன்னர் பஹ்த் அமெரிக்க தூதுவரை அவசரமாக நாட்டை விட்டும் வெளியேறுமாறு பணித்து அவரை மாளிகையிலிருந்து உடணடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டதை ஞாபகப்படுத்துகிறது.
மன்னர் பஹ்த் ஈரானின் அச்சுருத்தல்களால் சீனாவிடமிருந்து ஏவுகனைகளை வாங்குவதற்கு நாடினார் சீனாவுடன் அப்போது பெரிய தொடர்புகள் ஸவுதிக்கு இல்லை என்றாலும் இளவரசர் பந்தரை இதற்காக நியமித்து அனுப்பிய மன்னர் பஹ்த் அதில் வெற்றிகண்டார். ஆனால் எப்படி நீங்கள் இதைக் கொண்டுசெல்வீர்கள் என்ற கேள்வி சீனாவிடம் இருந்தது வாங்கப்பட்ட 50 ஏவுகனைகளையும் மிகச் சூட்சூமமான முறையில் ஸவுதிக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட பின்னரே அமெரிக்காவுக்கு இந்த விடயம் தெரிய வந்தது கோபமடைந்த அமெரிக்க ஜனாதிபதி அது விடயமாக மன்னர் பஹ்திடம் விசாரித்தார் அதை பரிசோதிக்க அணுமதி கோரினார் எதற்காகவும் அணுமதி வழங்கப்படமாட்டாது என்று கூறிய மன்னர் பஹ்த் அமெரிக்காவின் இந்த செயலை மிகவும் வன்மையாக கண்டித்தார் நண்பர்களுக்கிடையில் பாதுகாப்புக்காக செய்யப்படும் வேலைகளில் தலையிடக்கூடாது என்றார் அமெரிக்க தூதுவரை உடணடியாக மாளிகைக்கு அழைத்த மன்னர் உடணடியாக நாட்டை விட்டும் வெளியேறுமாறு பணித்ததோடு அவரை விமான நிலையம் வரை அழைத்து சென்று விட்டார்…
இதுதான் ஸவுதி ஆட்சியாளர்கள்… அதையே இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் தொடர்கிறார் மாற்றமில்லை மாறவுமில்லை வரலாறு தன்னை மீட்டிக்கொள்கிறது…








