பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பிரதமர் மாண்புமிகு முஹம்மது ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் அவரது குழுவினர் அரசுமுறைப் பயணமாக இன்று ரியாத் வந்தடைந்தனர்.

மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில், ரியாத் பிராந்திய துணை ஆளுநர் இளவரசர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் பின் அப்துல் அஸீஸ், முதலீட்டுத் துறை அமைச்சர் பொறியாளர் காலித் பின் அப்துல் அஸீஸ் அல்-ஃபாலிஹ், பாகிஸ்தானுக்கான சவூதி தூதர் நவாஃப் பின் சயீத் அல்-மால்கி, மற்றும் சவூதிக்கான பாகிஸ்தான் தூதர் அஹ்மத் ஃபாரூக் ஆகியோர் பிரதமர் ஷெரீபை வரவேற்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வருகை அமைந்துள்ளது. ஸவுதியின் யுத்த விமானங்கள் இரு பக்கமும் பாதுகாப்பு மரியாதை செலுத்த வருகை தந்த பாகிஸ்தான் பிரதமருக்கும் அவரது குழுவுக்கும் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
பாகிஸ்தானுடன் அது சுதந்திரமடைந்ததிலிருந்து மிகவும் வலுவான உறவைப் பேணும் ஸவுதி அதன் கஸ்டங்கள் அனைத்திலும் கைகொடுத்த முக்கிய நாடாகும். அண்மைய இந்திய பாகிஸ்தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததிலும் ஸவுதியின் பங்கு மிகவும் போற்றத்தக்கது அதற்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸவுதிக்கு வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமருக்கும் ஸவுதிக்கும் இடையில் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
* ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதாகும்.
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் பெரும் பங்காற்றவுள்ள இவ்வொப்பந்தம் இரு நாடுகளாக இருப்பினும் ஸவுதியும் பாகிஸ்தானும் அன்றும் இன்றும் என்றும் ஒரே நாடாகவே தொழிற்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.










