தற்காலம் ஆயுத போராட்டத்திற்குரிய காலமல்ல என்று சொல்லுமளவு அரசியல் ராஜ தந்திர நகர்வுகள் மிகவும் காத்திரமான பணிகளை ஆற்றிவருகின்றது. காஸா பிரச்சினை முழு மத்திய கிழக்கையும் பின்னர் முழு உலக நாடுகளையும் ஆட்டிப்படைக்கும் வல்லரசுகளில் மாற்றம் வரலாம் புதிய நாடுகள் தோன்றலாம், பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம், உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் உலக நிர்வாகத்தில் புதிய தலைகளும் தலைமுறைகளும் நாடுகளும் தோற்றம் பெறலாம் என்று பலராலும் கனவு காணப்பட்ட வேளையில் இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கும் அடிப்படையில் ஸவுதியின் நகர்வு அமைந்திருந்தது.
எத்தனை பேர் தூண்டினாலும் எவ்வளவு விமர்சனங்களைச் செய்தாலும் பிரச்சினையின் கனதியையும் ஆழத்தையும் தெரிந்துகொண்ட ஸவுதியின் ஆட்சியாளர்கள் மிக நுட்பமாக பிரச்சினையை கையாண்டார்கள் தனது ஆயுதங்களுக்கு வேலை கொடுத்து எங்கோ உள்ள பிரச்சினையை தன் நாட்டுக்குள்ளும் இழுத்து தனது மக்களுக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பிரச்சினையைக் கொடுக்காது. மிகுந்த தன்னடக்கத்தோடு அனைத்து விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு ராஜ தந்திர ரீதியான அணுகுமுறைகளில் நம்பிக்கை வைத்து இரவு பகலாக தொடர்ச்சியாக உழைத்தது. இதன் பயனாக இன்று அமெரிக்கா அதன் ஆக்கிரமிப்பு கொள்கையிலிருந்து இறங்கி காஸாவிலிருந்து இஸ்ரேல் இராணும் வெளியேற வேண்டும் என்ற கொள்கையை தீர்வுத் திட்டத்தில் முன்வைத்துள்ளது.
சர்வதேச அளவில் ஸவுதியால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் ஒதுக்கப்பட்ட அமெரிக்க வேறு வழியின் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது.








