சவூதி அரேபியாவின் வடக்கே அமைந்துள்ள அல்-ஜவ்ஃப் (Al Jawf) பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் (Drone) ஒன்றை தங்களது பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
ரியாத் மற்றும் கிழக்கு மாகாணம் போன்ற சவூதியின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய “அப்பட்டமான மற்றும் கோழைத்தனமான” தாக்குதல்களை சவூதி அரேபியா மிக வன்மையாகக் கண்டித்து நிராகரித்துள்ளது.
எந்தவொரு காரணத்தைக் காட்டியும், எந்த வடிவத்திலும் இந்தத் தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என சவூதி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கு இத்தகைய தாக்குதல்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், சர்வதேச சமூகம் இவற்றை வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என சவூதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.






