அரசியல் பகைமை, முரண்பாடுகளைத் தாண்டி உயர்ந்து நிற்கும் சவூதி அரேபியாவின் புனிதத்தன்மை

அஷ்ஷைக் எம்.எச். ஷைஹுத்தீன் BA மதனி. பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு

சவூதி அரேபியாவானது அதன் அளப்பரிய சகிப்புத்தன்மை மற்றும் மன்னிக்கும் பண்பிற்காகவே உலகறியப்பட்ட ஒரு தேசமாகும். எதிரிகளாகவே இருந்தாலும், பழிவாங்கும் உணர்வுகளுக்கு இடமளிக்காமல், அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து, எவ்வித நிபந்தனையுமின்றி அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து நடப்பதே அந்நாட்டின் அடிப்படையாகும்.

சவூதி தேசத்தை நிறுவிய மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர்ரஹ்மான் அல் ஸஊத் (அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக) அவர்களின் காலம் தொட்டு, இன்றைய இரு புனிதத் தலங்களின் காவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் ஸஊத் (அல்லாஹ் அவரைப் பலப்படுத்துவானாக) அவர்களின் காலம் வரை இந்த உன்னதப் பண்பு மாறாமலேயே தொடர்கிறது. நீதியையும் சகிப்புத்தன்மையையும் ஒருங்கே பேணுவதிலும், கொள்கைகளில் உறுதியாக இருப்பதோடு சூழ்நிலைகளை ஞானமாகக் கையாளுவதிலும் சவூதி அரேபியா என்றுமே தடம்மாறியதில்லை.

ஈரானிய ஹஜ் பயணிகளை மதீனா முனவ்வராவில் திறந்த கரங்களோடு சவூதி வரவேற்ற விதம், அதனுடைய இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். “அல்லாஹ்வின் விருந்தினர்களுக்குச் சேவை செய்வது என்பது எவ்வித அரசியல் முரண்பாடுகளாலும் பாதிக்கப்படாத ஒரு புனிதக் கடமை” என்பதையும், “வழிபாடுகள் எப்போதுமே அரசியல் இழுபறிகளுக்கும் மோதல்களுக்கும் அப்பாற்பட்டவை” என்பதையும் இது உலகுக்கு ஆணித்தரமாக உணர்த்துகிறது.

ஈரானில் இருந்து வந்த முதல் ஹஜ் பயணிக் குழு, எவ்வித அச்சமுமின்றி, மிகுந்த பாதுகாப்புடனும் நிம்மதியுடனும் மதீனாவை வந்தடைந்தது. சவூதி அரசாங்கம் அவர்களுக்கு அளித்த சிறப்பான வரவேற்பு, இறையில்லத்தின் விருந்தினர்களைக் கண்ணியப்படுத்துவதில் அந்நாடு கொண்டிருக்கும் ஆழமான விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது.
ஹாஜிகளுக்குச் சேவை செய்வதை ஒரு மாபெரும் கௌரவமாகவும், தம்மீது சுமத்தப்பட்ட பெரும் அமானிதமாகவும் சவூதி கருதுகிறது. எந்தவொரு ஹாஜிக்கும் இடையில் எவ்விதப் பாகுபாடும் காட்டாமல், மார்க்கக் கடமைகளோடு அரசியலைக் கலக்காமல், மிகவும் நேர்மையுடனும் தூய்மையுடனும் அப்பொறுப்பை அது நிறைவேற்றி வருகிறது.

வழிபாடுகளை அரசியலாக்குவதையோ அல்லது அதன் புனிதத்தைக் கெடுப்பதையோ நிராகரிக்கும் அதன் உறுதியான நிலைப்பாடே இதற்குக் காரணமாகும்.
தன் முன்னுரிமைகளைச் சவூதி தங்க எழுத்துக்களால் செதுக்கி வைத்துள்ளது. ஹாஜிகளின் பாதுகாப்பு, அவர்களின் நிம்மதி, மற்றும் அவர்கள் தமது மார்க்கக் கடமைகளை இலகுவாக நிறைவேற்றுவதற்கான வசதிகள் ஆகியவற்றிற்கே அது முதலிடம் அளிக்கிறது. இதற்காக, மிகவும் பாதுகாப்பான மற்றும் நேர்த்தியான ஒரு சூழலை உறுதிப்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த சேவைகளை சவூதி அரசாங்கம் வழங்குகிறது.

சுயநலன்கள் மேலோங்கி, முரண்பாடுகள் மலிந்து கிடக்கும் இந்த உலகில், மார்க்கக் கடமைகளின் புனிதத்தன்மை என்பது ஒருபோதும் சமரசம் செய்ய முடியாத ஒரு கொள்கையாகும். இந்த அடிப்படையில், ஹஜ் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு புனித வழிபாடு என்றும், அதனை ஒருபோதும் அரசியல் மோதல்களுக்கோ அல்லது இழுபறிகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்றும் சவூதி உறுதியாக நம்புகிறது.
மக்கா என்பது அரசியல் கோஷங்களை எழுப்புவதற்கோ, முரண்பாடுகளைக் காட்டுவதற்கோ உள்ள களமல்ல, மாறாக அது அல்லாஹ் ஒருவனுக்கே முற்றிலும் அடிபணிந்து செய்யப்படும் தூய்மையான வழிபாட்டிற்கான தளமாகும். அங்கு அனைவரும் இறைநம்பிக்கை என்ற ஒரே குடையின் கீழ் சமமாக நின்று, ஹாஜிகளின் பாதுகாப்புக்காகவும் வசதிக்காகவும் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடித்து அமைதியாகச் செயல்படுகின்றனர்.

அல்லாஹ்வின் பெருங்கிருபையால், ஹஜ் காலங்களை மிகச் சிறந்த முறையில் நிர்வகிப்பதில் சவூதி அரேபியா மாபெரும் வெற்றி கண்டுள்ளது. பல இலட்சக்கணக்கான ஹாஜிகளை அரவணைப்பதற்கும், அவர்களுக்கு அதிஉயர் பாதுகாப்பையும் கவனிப்பையும் வழங்குவதற்கும் இடையில் ஒரு நேர்த்தியான சமநிலையை அது பேணி வருகிறது. அதன் இந்த நிர்வாகத் திறன் உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
இத்தகைய சூழலில், அரசாங்கத்தின் வழிகாட்டல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவது என்பது ஹாஜிகள் மீதான கட்டுப்பாடல்ல; மாறாக, அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும், வழிபாட்டின் தூய்மையைக் கெடுக்கும் எவ்விதச் செயல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பதற்குமான ஒரு அத்தியாவசியத் தேவையாகும் என்பதை சவூதி வலியுறுத்துகிறது.

சவூதி அரேபியா செய்யும் இவையனைத்தும், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சேவை செய்வதையே எல்லாவற்றிற்கும் மேலான கடமையாகக் கருதும் ஒரு உன்னத தேசத்தின் பிம்பத்தைப் பிரதிபலிக்கின்றன. அல்லாஹ்வின் நாட்டத்தால், ஹஜ் என்பது பிரிவினைக்கோ அல்லது மோதல்களுக்கோ இடமில்லாத, அமைதியும் கருணையும் தவழும் ஒற்றுமையின் களமாக என்றென்றும் நிலைத்திருக்கும்.
இதுவே சவூதி அரேபியா!

கொள்கையில் உறுதி, கையாள்வதில் நீதி, மற்றும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்குச் சேவை செய்வதில் இணையற்ற உன்னதம்!

சவூதி அரேபியாவின் தலைவர்கள், அரசாங்கம் மற்றும் மக்களை அல்லாஹ் பாதுகாப்பானாக! மேலும், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு பலமாகவும், அரணாகவும் அதனை ஆக்கியருள்வானாக!

  • Related Posts

    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), சூடான் நாட்டின் போர்ட் சூடான் (Port Sudan) நகரின் தெற்குப் பகுதியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் சீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: சூடானின் பல்வேறு…

    Read more

    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் சவுதி தேசிய நிவாரணப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) காஸா பகுதியின் பல்வேறு மாகாணங்களில் அவசரகால மனிதாபிமானப் பதிலளிப்புத் திட்டத்தின் (Urgent Humanitarian Response…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 13 views
    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 21 views
    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 15, 2026
    • 16 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    சவுதி விண்வெளி நிறுவனம் மற்றும் KAUST: அல்சைமர் நோய்க்குத் தீர்வு காண விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரியல் மாதிரிகள்

    • By Admin
    • October 15, 2026
    • 11 views

    காஸாவின் கான் யூனிஸில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அவசர உதவி

    • By Admin
    • October 13, 2026
    • 14 views
    காஸாவின் கான் யூனிஸில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அவசர உதவி

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,200 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 13, 2026
    • 15 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,200 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த சவுதி நிவாரண வாகனங்கள்