காஸா பிரச்சினையின் பின்னர் அடங்கியிருந்த அணுவாயுத வல்லரசுகள் அனைத்தும் முன்னால் வர ஆரம்பித்துள்ளன அமெரிக்காவை பின்தள்ளி நான் எப்போது மத்திய கிழக்கில் முதல் நிலை பெறுவது என்றிருந்த பல வல்லரசு நாடுகள் தற்போது களத்திற்கு வந்துவிட்டன. அமெரிக்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளே ஒன்று திரண்டுவிட்டன, அவைகள் அனைத்தும் சேர்ந்து பலஸ்தீன சுதந்திர நாட்டை அங்கீகரித்துள்ளன சர்வதேசப் படை அங்கு நிறுத்தப்படவுள்ளன. இது அமெரிக்காவுக்கு தலையிடி என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதன் வல்லாதிக்கத்தையும் மதிப்பையும் நட்பு நாடுகளிடம் இழந்து வருகின்றது என்பதற்கான பெரும் எடுத்துக்காட்டாகவும் உள்ளது.








