

டமாஸ்கஸ் மக்களால் உயர்மட்ட சவுதி தூதுக்குழுவிற்கு அமோக வரவேற்பும் உபசரிப்பும் வழங்கப்பட்டுள்ளது, எங்களுக்கு உதவி வரும் உங்கள் நாட்டிற்கும் உங்கள் மக்களுக்கும் மிக்க நன்றி என அந்த மக்கள் ஆர்ப்பரித்தனர்.
கிங் சல்மான் மையம் சிரியாவில் 450 க்கும் மேற்பட்ட மனிதாபிமான மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்குகிறது. ஒரு பில்லியன் யூரோக்களுக்கு மேல் மதிப்புள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான சிரியர்களுக்கு சேவை செய்யும் திட்டங்கள் இதில் அடங்குகின்றன. மேலும் அனைத்து சிரிய மாகாணங்களிலும் 450 டயாலிசிஸ் இயந்திரங்களையும் வழங்கியது.
இத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக வருகை தந்த உயர்மட்டக் குழுவை ஆதரித்த சிரிய மக்கள் மனம் னெகிழ்ந்து பேசினர். கடவுள் உங்களுக்கு சிறந்த பரிசை வழங்கட்டும். ஆம், நீங்கள் எங்கள் சகோதரர்கள், இல்லை எங்கள் குடும்பம். உங்களுக்கு கடன்பட்டவர்களாக நாங்கள் மாறிவிட்டோம். எங்களை நீங்கள் உங்களை விடவும் அதிகமாக கௌரவிக்கிறீர்கள் என்று கூறினர்.