
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயோக்கில் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் பலஸ்தீன தனி நாட்டுக்கான முன்னெடுப்பிக்கள் மேற்கொள்ளப்படவுள்ளது அதற்காக ஸவுதி மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக பல ஐறோப்பிய நாடுகளும் வல்லரசுகளும் பலஸ்தீன தனி நாட்டை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க பலஸ்தீனக் குழு நியூயோக்கிற்கு வருவதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆள்தியுள்ளது.
இதுதொடர்பில் ஸவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்:
அடுத்த செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் எண்பதாவது அமர்வில் பங்கேற்க இருந்த பாலஸ்தீன் நாட்டின் பிரதிநிதி குழுவிற்கு நுழைவு விசா வழங்குவதில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எடுத்த முடிவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் முமுடிவினை மீள்பரிசீலனை செய்யுமாறும் இது சமாதான முயற்சிகளை வெகுவாக பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.