
மன்னர் அப்துல் அஸீஸ் அவர்களின் காலத்தில் ஸவுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை ஸவுதி அதிகம் செலவிடுகின்ற தனது தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக கருதும் விடயமாக பலஸ்தீனப் பிரச்சினை அமைந்துள்ளது.
பலஸ்தீனப் பிரச்சினை அதிக முஸ்லிம் நாடுகளுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். அனைத்து நாடுகளுடைய சம்மதத்துடனே விடயங்களை கையாளுதல் வேண்டும் அததோடு பலஸ்தீனத்தின் ஆயுதக் குழுக்களின் ஆதரவும் மிகவும் முக்கியமானதாகும் இதனால் குறித்த பிரச்சினையில் ஒரு தீர்வை நோக்கிய நகர்வு மிகவும் கடினமானதோர் விடயமாக இருந்தாலும் ஸவுதி அரேபியா பல சவால்களுக்கு மத்தியில் அன்று தொடக்கம் இன்று வரை பலஸ்தீனின் சுயாட்சிக்கு தன்னால் முடியுமானதைச் செய்துவருகின்றது. அதனால் முன்வைக்கப்பட்ட தீர்வை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டாலும் அது பல நாடுகளினால் அங்கீகரிக்கப்படாத நிலையில் தற்போதய செப்டம்பர் மாநாடு தீர்க்கமான ஒரு மாநாடாக அமைய இருக்கின்றது பல நாடுகள் புதிதாக இந்த தீர்வு திட்டத்தை ஆதரிப்பதாகவும் இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதிக்க இருப்பதாகவும் அறிவித்திருப்பதனால் பலஸ்தீன சுய ஆட்சி கொண்ட நாட்டை உருவாக்குதல் தொடர்பான உயர்மட்ட மாநாடு பலரின் எதிபார்ப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கின்றது.
பலஸ்தீன அரசாங்கத்தின் நிருவாகச் செலவுகள், உட்கட்டுமானம் மற்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் யுத்தங்களின் பின்னர் ஏற்படும் அழிவுகளை சீர் செய்தல் என ஸவுதியின் நிவாரணப்பணிகளும் தடையின்றித் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.