

முஹம்மத் பின் ஸல்மான் இன்று அனைத்து உலக நாட்டுத் தலைவர்களாலும் மதிக்கப்படுகிறார் நாமும் அவரோடு இணைந்து கொள்ள வேண்டும் அவர்களின் பணியில் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்று உலக நாட்டுத் தலைவர்கள் முன்டியடிக்கிறார்கள். எப்போதாவது எமது நாட்டில் அவரின் காலடி படாதா என்று ஏங்குகிறார்கள்…
இத்தனைக்கும் அவர் அவர்களுக்கு பெரியளவில் ஏதும் செய்யவில்லை மாறாக அவர்கள் ஸவுதியை ஏளனமாகப் பார்த்ததால் அவர்களைப் புறக்கனித்தார் தன்னோடு நன்றாக உள்ளவர்களை அரவனைத்தார் அவர்களுடன் சேர்ந்த ஸவுதியை முன்னேற்ற திட்டமிட்டார் தனது சிறந்த திட்டமிடல்களாலும் தொலைநோக்குப் பார்வையாலும் அனைத்து தலைவர்களினதும் நன்மதிப்பை வென்றார். ஸவுதியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றார். ஸவுதியில் பொருட்களைத் தயாரித்து ஸவுதி மக்களுக்கும் குறித்த தொழிநுட்பத்தை வழங்கத் தயாரில்லாதவர்களுடன் ஸவுதி எத்தகைய வர்த்தக ஒப்பந்தத்தையும் பேணாது என்றார்.. அதில் உறுதியாக இருந்தார் ஸவுதியை முன்னேற்ற அவர் வகுத்த இந்த புதிய வியுகம் நாளாக நாளாக பல நாடுகளின் ஆதரவைப் பெற்றது பல நிறுவனங்கள் தங்கள் கிளைகளை ஸவுதியில் திறந்தார்கள்… தப்போதும் திறப்பதற்கு மிகவும் சிறமப்படுகிறார்கள்…