

சவுதி மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரின் உத்தரவின்படி, இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு ஆரம்பத்திலிருந்தே உதவி வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலைவகிக்கின்றது.
ஆறு மாதங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடையாத நிலையில், முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியுள்ள நாடாக சவுதி அரேபியா காணப்படுகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் சவுதியின் மனிதாபிமான நடவடிக்கைகளில் இது முதன்மையானதாகும்.
வெளிநாடுகளிலிருந்து வரும் மனிதாபிமான உதவிகள் பல குழுக்களால் கொள்ளையிடப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், சவுதி அரேபியா நேரடியாக களமிறங்கி உதவி பொருட்களை கொண்டு சென்று விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தேவைப்படும் மக்களுக்கு, உதவிகள் சரியான முறையில் சென்றடைவதை உறுதிசெய்துள்ளது.
இந்த மனிதாபிமான உதவி, காஸா மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதோடு, இந்த நெருக்கடியான தருணத்தில் அவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது. அதே நேரம், சவுதி அரேபியாவின் இந்த செயல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அதன் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.