

ஆளில்லா விமாணங்கள் ரோன்கள் இன்று ஒரு நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரும் பங்காற்றி வருகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் போர்க்கருவியாக பார்க்கப்படும் ரோன்களை அபிவிருத்தி செய்வதில் பல நாடுகளும் முனைப்புடன் செயலாற்றுகின்றது.
அந்த வகையில் ஸவுதி தனது பாதுகாப்பு மற்றும் இன்னபிற தேவைகளுக்காக ஆளில்லா விமான உற்பத்தியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இராணுவச் செலவைக் குறைப்பதற்கு உகந்த வழியாக இதைப் பயன்படுத்துகின்றது. 2012 ஆம் ஆண்டிலிருந்து ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப் பட்டாலும் அது தற்போது மிக வேகமாக முன்னேற்றம் கண்டுவரும் ஒரு துறையாக ஸவுதியில் மாறிவருகின்றது பல்வேறு வகையான ட்ரோன்களை உருவாக்கி ஸவுதி சாதணை படைத்து வருகின்றது. இந்நிலையில் செயற்கை தொழிநுட்பத்தைக் கொண்டு இயங்கும் ரோன்களை உருவாக்கும் பல தொழிற்சாலைகள் ஸவுதியின் பல இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் இவ்வுப்பத்தியில் பெண்களுலம் பங்காற்றிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.