
அரபு தீபகற்பத்தை தன்னிகரற்ற தலைவராக நோக்கப்படும் ஸவுதியின் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானுக்கு இன்று (2025.08.31) 40ஆவது வயது ஆரம்பம் 1985.08.31ல் பிறந்த அவர் தனது ஆரம்பக் கல்வி உயர் கல்வி அனைத்தையும் ஸவுதி அரேபியாவின் பாடசாலையிலும் மன்னர் ஸஊத் பல்கலைக்கழகத்திலும் கற்றார் ஸவுதி அரேபியாவிற்கு வெளியில் குறிப்பாக மேற்கத்தேய நாடுகளில் கல்வி கற்காத சிந்தனைப்பாதுகாப்பும் சுய கட்டுப்பாடும் உள்ள ஓர் இளம் தலைவராக அனைவராலும் போற்றப்படுகிறார்.
மன்னர் ஸுஊத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்துறையில் இளங்கலைமானிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இளமைப்பருவத்திலேயே படிப்பில் சிறந்து விளங்கிய அவர் தனது உயர்தரப்பரீட்சையில் ஸவுதியில் 10ஆவது நபராக சித்தியடைந்தார். தனது தந்தை மன்னர் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களின் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் அவருக்கு மிகப்பெரும் உதவியாளராக இருந்தார். ஸவுதியின் முதலீட்டுத் துறை பாதுகாப்பு உள்விவகாரம் என பல்துறைப் பொறுப்புக்களை வகித்த நிலையில் 2017ஆம் ஆண்டு ஸவுதியின் பட்டத்து இளவரசராக முடிசூடப்பட்டார். ஸவுதியையும் பிராந்தியத்தையும் உலகின் முன்னேற்றமிக்க இடமாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டார்.
ஒரு நாட்டை பிராந்தியத்தை முன்னேற்றுவதாயின் பிரச்சினைகள் அற்ற சூழல் அவசியமாகும். அதனால் எல்லைகளில் தனது நாட்டுக்கு அச்சுருத்தல் விடுத்துக்கொண்டிருந்த ஈரானின் கூலிப் படைகளை முடிக்க களமிறங்கினார் வெற்றி கண்டார். உள்நாட்டிலிருந்த முரண்பாடுகளை கட்டுப்படுத்தினார். உள்நாட்டில் பல போற்றத்தகு சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். ஆலிம்களையும் அறிஞர்களையும் இரு கண்ணாக மதித்த அவர் ஸவுதியின் பாதுகாப்பை முதல் நிலைப்படுத்தினார். இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை அதிகரித்து வேலையில்லாப் பிரச்சினையைக் குறைத்தார்.
2030ல் தனது நாடு உலகில் முன்னேற்றமடைந்த நாடாக மாறி அடுத்தவர்களிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நாடாக இல்லாது அடுத்தவர்களுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாற வேண்டும் என்ற பெரும் திட்டத்தை வகுத்தார். இளவயதிலும் அவரது நுனுக்கமான திட்டங்களும் நகர்வுகளும் அனைவரின் ஆச்சரியத்தைத் தூண்டியதுதான். அவருக்கு பின்னால் பிராந்தியமே அணி திரண்டது.
தன்னைச் சுற்றியிருந்த ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்தால் ஸவுதியும் அதை உற்பத்தி செய்யும் என்பதில் உறுதியாக இருந்தார். யார் எதிர்த்தாலும் ஸவுதியின் பாதுகாப்பும் முன்னேற்றமும் தலையாய கடமை என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தார்.
பாதுகாப்பு தளபாடங்கள் உற்பத்தி, வாகண உற்பத்தி, தொழி நுட்ப்ப சாதணங்கள் உற்பத்த்தி, விவசாய முன்னேற்றம், பசுமைச் சூழல், செயற்கை நுண்ணறிவு என்று பல துறைகளிலும் பெருந் தொகையான முதலீடுகளைச் செய்தார். எதிரும்புதிருமான பல நாடுகளை ஸவுதியில் ஒன்று சேர்த்து தன் நாட்டை முன்னேற்ற முயற்சிக்கிறார்.
அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக. சிறந்த பணியாளர்களை அவருக்கு ஏற்படுத்திக் கொடுப்பானாக. சத்தியத்திற்கும் மனிதநேயத்திற்கும் உழைக்கக்கூடியவராக அவரை ஆக்கி வைப்பானாக. நீண்ட ஆயுளையும் புரண சுகத்தையும் கொடுப்பானாக.