மதீனா முனவ்வராவில் உள்ள இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் கிளை அலுவலகம், அக்டோபர் 8 முதல் 14, 2026 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 536 தஃவா (அழைப்புப்) பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் 47,344 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பயனடைந்துள்ளனர்.
இந்த ஆன்மீகச் செயல்பாடுகளில் பின்வருவன அடங்கும்:
*
107 மார்க்க சொற்பொழிவுகள்
*
102 கல்விசார் வகுப்புகள்
*
327 உபதேச உரைகள்
மேலும், முறையான மார்க்கக் கல்வியைப் பரப்புவதற்கும், மிதவாதக் கொள்கையை நிலைநிறுத்துவதற்கும் அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, விழிப்புணர்வு அட்டைகள் மற்றும் வீடியோ கிளிப்புகள் உள்ளிட்ட 33 டிஜிட்டல் தஃவா தயாரிப்புகளையும் இந்த கிளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 89,430 பயனாளர்கள் ஒன்லைன் மூலமாகப் பயனடைந்துள்ளனர்






