இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் துறை அமைச்சர் ஷேக் டாக்டர் அப்துல்லத்தீஃப் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஷேக் அவர்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து தந்திச் செய்திகள் (Telegram messages) வந்துள்ளன. சவுதி அரேபியாவிற்கு எதிராக விடுக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கும் புனிதத் தலங்களுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் ஏற்கமுடியாதவை என்றும், சவுதியுடன் உறுதியோடு நிற்பதாகவும் வலியுறுத்தியுள்ளனர்.
அந்தத் தந்திச் செய்திகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு: ![]()
சாட் நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான தேசிய கவுன்சில் தலைவர் ஷேக் டாக்டர் அப்துத்தாஇம் அப்துல்லா உஸ்மான், இரு புனிதத் தலங்களின் கண்ணியமும் பாதுகாப்பும் அனைத்துவித கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களுக்கு அப்பாற்பட்டது என வலியுறுத்தியுள்ளார். அவற்றின் பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்குக் கண்டனம் தெரிவித்த அவர், இரு புனிதத் தலங்களை இலக்கு வைப்பது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் செயல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கங்கோ ஜனநாயகக் குடியரசின் தேசிய உலமாக்கள் சபையின் தலைவரும் அந்நாட்டின் முப்தியுமான ஷேக் ஸைத் ஙோங்கோ அமானி, சவுதி அரேபியாவின் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சவுதியின் பாதுகாப்பிற்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் அனைத்துச் செயல்களையும் நிராகரிப்பதாகக் கூறிய அவர், தன் நாட்டின் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவுக்கு வழங்கும் ஆதரவை உறுதிப்படுத்தினார். மேலும், இரு புனிதத் தலங்களை தன்னுள் கொண்டுள்ளதால் முஸ்லிம்களின் இதயங்களில் சவுதி பெற்றுள்ள உயர்ந்த இடத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும் நியூசிலாந்தின் தலைமை முப்தியும் உலமாக்கள் சபையின் தலைவருமான ஷேக் முஹம்மத் ஆமிர் ஃபைஸுர் ரஹ்மான், ஹூதிகளின் தாக்குதல்களுக்குக் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளார். பொதுமக்கள், முக்கிய நிறுவனங்களை இலக்கு வைப்பதையும் அமைதியாக வாழ்பவர்களை அச்சுறுத்துவதையும் நிராகரித்த அவர், நாட்டின் இறையாண்மையையும் புனிதத் தலங்களையும் பாதுகாக்க சவுதி அரேபியாவுக்கு முழு உரிமை உண்டு என வலியுறுத்தினார். மேலும், பதற்றத்தை அதிகரிப்பதை விட பேச்சுவார்த்தைக்கும் அமைதிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
#இஸ்லாமிய_விவகாரங்கள்#சவுதிஅரேபியா#இருபுனிதத்தலங்கள்






