பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் சவுதி தேசிய நிவாரணப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின்’ (KSrelief) கீழ் செயல்படும் மைய சமையலறை, காஸா பகுதியில் நேற்று முன்தினம் 24,800 சூடான உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது.
கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில், காஸாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. நெருக்கடியில் சிக்கியுள்ள பலஸ்தீன மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் சவுதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகளின் தொடர்ச்சியாகவே இந்த நிவாரணப் பணி அமைந்துள்ளது.






