தெற்கு காசா பகுதியில் அமைந்துள்ள ‘மக்கா பாடசாலை’ (Makkah School), புதிய கல்வியாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு நேற்றைய தினம் தனது மாணவர்களை வரவேற்றது. மாணவர்களின் கல்விப் பயணத்தைத் தொடரவும், அவர்களின் திறமைகளை வளர்க்கவும் ஏதுவான பொருத்தமான கற்றல் சூழலில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சகோதர பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சவூதி அரேபியாவின் மக்கள் பிரச்சாரத்தின் கீழ், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதநேயப் பணிகள் மையத்தின் (KSrelief) நிதி ஆதரவோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சுகாதார மற்றும் ஒழுங்கமைப்பு ஆயத்தங்களைத் தொடர்ந்து, முதல் நாளில் மாணவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டு, பாடசாலைச் சூழல் குறித்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் இயல்புநிலைக்குத் திரும்பி, கற்றல் செயல்பாடுகளை தடையின்றித் தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் மாணவர்களுக்கான முழுமையான மருத்துவப் பரிசோதனைகள், பல் மற்றும் கண் பரிசோதனைகள் ஆகியவை அடங்கும். மேலும், சுகாதார அமைச்சுடன் இணைந்து முதலாம் தர மாணவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.
காசா பகுதியில் பாதுகாப்பான கற்றல் இடங்களை உருவாக்கி இயக்குவதற்கான மனிதநேய அவசரகால உதவித் திட்டத்தின் கீழ், மன்னர் சல்மான் நிவாரண மையத்தால் நிதியளிக்கப்படும் கல்வி முன்முயற்சிகளுள் இந்த ‘மக்கா பாடசாலை’ முக்கிய ஒன்றாகும். காசாவில் உள்ள மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அமுலாக்கப் பங்காளியான ‘கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கான சவூதி மையம்’ (Saudi Center for Culture and Heritage) இப்பாடசாலையின் நிர்வாகத்தையும் அமுலாக்கத்தையும் மேற்பார்வையிடுகிறது. குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தி, பாதுகாப்பான கற்றல் சூழலை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
சகோதர பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கவும், பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளின் போது அவர்களின் துன்பங்களைக் குறைக்கவும் சவூதி அரேபியா தனது மனிதநேயக் கரமான மன்னர் சல்மான் நிவாரண மையம் வழியாக வழங்கி வரும் விரிவான நிவாரண மற்றும் மனிதநேய உதவிகளின் ஒரு பகுதியாகவே இச்சேவை அமைகிறது. ![]()
![]()
#பாலஸ்தீனம்#காசா#சவூதி_அரேபியா#கல்வி#மன்னர்_சல்மான்_நிவாரண_மையம்#மனிதநேய_உதவி#Gaza#Palestine#KSrelief#SaudiArabia#MakkahSchool#Education








