சவூதி அரேபியாவுக்கு எதிரான வெறுப்பை உருவாக்கியது தற்செயலான ஒன்றல்ல. உண்மையான நோக்கங்களை மறைத்தல், பேச்சில் சூழ்ச்சியைக் கையாளுதல், ஊடகங்கள் வாயிலான தவறான தகவல்களைப் பரப்புதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட திட்டமிட்ட அணுகுமுறையாகவே அது அமைந்திருந்தது. பார்வையாளர்களுக்கு ஏற்ப பேச்சின் போக்கை மாற்றுதல், தவறுகளைப் பெரிதுபடுத்திக் காட்டுதல், கதைகளை இட்டுக்கட்டுதல், சாதனைகள் ஒவ்வொன்றையும் கேலி செய்தல் போன்ற வழிமுறைகள் மூலம், முஸ்லிம்களின் உள்ளங்களில் சவூதி அரேபியா ஒரு எதிரி என்ற பிம்பம் படிப்படியாக உருவாக்கப்பட்டது.
இங்குதான் ஹூதி மற்றும் ஈரானியப் பிரசாரங்களின் ஆபத்தும், அவற்றைச் சுற்றியுள்ள தரப்புகளின் அணுகுமுறையின் ஆபத்தும் வெளிப்படுகிறது. அவர்கள் எப்போதும் தங்களுடைய உண்மையான கோஷத்தை நேரடியாக முன்வைப்பதில்லை. மாறாக, வெறுப்பை படிப்படியாக உருவாக்குகிறார்கள். அதன் மூலம் முதலில் சவூதி அரேபியாவை இலக்காகக் கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தோன்றும் நிலையை உருவாக்குகிறார்கள். பின்னர், தூண்டுதல்களால் ஒருவரின் சிந்தனை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் புனிதத் தலங்களை இலக்காகக் கொள்வதற்குக்கூட நியாயப்படுத்தல்கள் முன்வைக்கப்படும் சூழல் உருவாகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு எச்சரித்துப் பேசுவது பலரால் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று நிகழும் நிலைமை, அத்தகைய அனைத்து எச்சரிக்கைகளையும் விட தெளிவாகப் பேசுகிறது. தங்களை “சுன்னிகள்” என்று அழைத்துக்கொள்ளும் சிலர், இன்று மக்கா மற்றும் மதீனாவை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களைக்கூட நியாயப்படுத்தத் தொடங்கியுள்ளனர்; அதுமட்டுமல்லாமல், அதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றவர்களும் உள்ளனர்!
மக்கா மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்றால், பிரச்சினை இனி சவூதி அரேபியாவில் இல்லை… நீங்கள் இழந்துவிட்ட அந்தத் திசைகாட்டியில்தான் பிரச்சினை இருக்கிறது.
மக்கா ஓர் அரசியல் பேரம் பேசும் அட்டையல்ல. புனிதத் தலங்களின் புனிதத்தன்மை என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்கு உட்பட்ட விஷயமல்ல.
அல்லாஹ் சவூதி அரேபிய இராச்சியத்தின் வீரர்களைப் பாதுகாப்பானாக! அவர்களுக்குத் தீங்கையும் தீமையையும் நாடுகின்ற அனைவருக்கும் எதிராக அவர்களுக்கு வெற்றியை வழங்குவானாக!





