பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் சவுதி அரேபியாவின் தேசிய நிவாரணப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) காஸா பகுதியில் மாபெரும் குடிநீர் விநியோகத் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான அவசர மனிதாபிமானத் திட்டத்தின் கீழ், காஸாவின் பல்வேறு மாகாணங்களில் 5,00,000 லிட்டர் சுத்தமான குடிநீர் நேற்று முன்தினம் விநியோகிக்கப்பட்டது.
நெருக்கடியில் சிக்கியுள்ள பலஸ்தீன மக்களின் துயரங்களைத் துடைப்பதற்கும், அத்தியாவசியத் தேவையான நீர்த் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் சவுதி அரேபியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் மனிதாபிமான முயற்சிகளின் முக்கிய அங்கமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.






