என்ன பிரச்சினை ஏன் இப்படி?

மத்திய கிழக்கில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை முடிந்தாலும் அதைவைத்து சர்வதேச ரீதியில் செய்யப்படும் பிரச்சாரங்களின் விளைவுகளிலிருந்து மக்கள் விடுபட மிக நீண்ட காலம் தேவைப்படும் என்பது தெரிகிறது.

மத்திய கிழக்கில் மிக நீண்ட காலமாக அணுவாயுதத்தைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியுள்ளது. அண்மைக்காலங்களில் அதன் யுரேனிய செறிவுட்டல் அணுவாயுதத்தை மிக விரைவில் உற்பத்தி செய்யும் அளவுக்கு அதிகரித்தது இதை அவதானித்த உலக சன்டியன் அமெரிக்கா பிராந்தியத்தில் இது தன் பொருளாதார நலன்களுக்கு ஆபத்து வரும் என்று பயந்தது அத்தோடு உலகில் அணுவாயுத நாடுகளுக்கிடையில் ஒரு சமச் சீரற்ற நிலையையும் இலகுவாக அடுத்த நாடுகள் அணுவாயுதத்தை பெற முயற்சிக்கலாம் என்ற பீதியையும் உருவாக்கியது இது அடுத்த நாடுகளுக்கு ஆபத்தோ இல்லையோ தனது சன்டியன் பட்டத்திற்கு ஆபத்து என்பதை நன்றாக உணர்ந்த அமெரிக்கா இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தது.

பிராந்தியத்தில் ஏற்கனவே அணுவாயுதத்துடன் இருக்கும் இஸ்ரேல் ஈரானை விட்டால் பிராந்தியத்தில் தனது எதிர்பார்ப்புகளுக்க ஆபத்து என்பதை உணர்ந்ததோடு அமெரிக்காவின் உதவியுடன் அழித்துவிடலாம் என்று முயற்சித்தது. அத்தோடு ஈரானை கட்டுப்படுத்தும் முயற்சியில் இஸ்ரேல் அமெரிக்காவைத் தூண்டி தன் பலத்தை இதற்காக முழுமையாக பயன்படுத்தது முன் வந்தது. இது அமெரிக்காவின் ஆயுத விற்பனைக்கும் பொருளாதார கணவுகளுக்கும் பிடித்துப்போக உடனடியாக தன் மத்திய கிழக்கு நண்பர்களுக்கே அறிவிக்காது ஆலோசனை பெறாது போராடத் துவங்கியது..

இப்படி ஒரு முஸ்தீபு நடப்பதை மோப்பமிட்ட ஈரான் இந்தப் பிரச்சினையை வேறு பக்கம் திருப்ப காஸாவை பயன்படுத்தியது. ஹமாஸைப் பயன்படுத்தி உலகின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி பிராந்தியத்தை போராட்டத்தில் மூள்கடிக்க முயற்சித்தது.

திட்டத்தின் உள்நோக்கங்களை முற்கூட்டியே புறிந்துகொண்ட அரபு நாடுகள் இந்த விடயத்தில் முஸ்லிம் சகோதரர்கள் பாதிக்கப்பட்டாலும் பிராந்தியம் முழுக்க அனைத்தையும் இழந்துவிடக்கூடாது என்ற நோக்கோடு சமாதான ரீதியாக பிரச்சினையை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சர்வதேச ரீதியாக செய்ததோடு போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டது.

காஸாவின் விடயத்தில் கோபமடைந்த இஸ்ரேல் ஈரானுக்கு பாடம் கற்பிக்க வெளிக்கிட்டதில் அமெரிக்காவுடன் சேர்ந்து போரெடுத்தது. அமெரிக்காவும் ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்திற்கு வரவேண்டும் என்று காலக்கெடு விதித்து கவனிக்கப்படாததால் போராடத் துவங்கியது.

இந்த நிலையில் அரபு நாடுகள் ஈரான் அணுவாயுதம் பெறுவதை மிகவும் கடுமையாக எதிர்க்கின்றன. பிராந்தியம் முழுக்க தன் ஆளுகையின் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை அரசகொள்கையாக வைத்திருக்கும் ஒரு நாடு அதற்காக அடுத்தவர்களை கொண்ரு குவிக்கும் நாடு, அதற்காகவே தன் மக்கள் பட்டினியால் அவஸ்தைப்பட்டாலும் ஆயுதங்களை உர்ப்பத்தி செய்யும் நாட்டிடம் இவ்வாறான பலம் வந்துவிட்டால் நாம் அனைவரும் அதற்கு அடிமையாக வேண்டும் மற்றும் பிராந்தியம் முழுக்க ஸிரியாவாக இன்னொரு ஈராக்காக மாற்றப்படலாம் என்பதால் தன் நற்பு நாடான அமெரிக்காவிடம் போராட்டத்திற்கு அணுமதி வழங்கவில்லை என்றாலும் ஈரான் அணுவாயுதம் பெறக்கூடாது என்பதில் ஆலோசனைகள் வழங்கியதோடு அவர்கள் அணுவாயுதம் பெறுவார்களாயின் நாமும் அணுவாயுதம் பெற நிர்ப்பந்திக்கப்படுவோம் என்று டிமான்டும் வைத்தன.

அதனால்தான் ஈரானுக்கு எதிரான போரில் எந்த ஒரு நாடும் ஆதரவும் வழங்கவில்லை எதிர்ப்பும் சொல்லவில்லை, அமெரிக்காவின் சார்பாக தங்கள் நாடுகளில் உள்ள அவர்களின் தளங்களைப் பயன்படுத்த அணுமதிக்கவுமில்லை என்ற நிலை தொடர்கின்றது. எனவே, இது அணுவாயுத பிரச்சினையே தவிர இஸ்லாமோ பாலஸ்தீனமோ இதில் பக்கத்திலும் இல்லை தூரத்திலும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆனாலும், இந்தப் பிரச்சினை முஸ்லிம்களுக்கு சார்பாக ஈரான் செயற்படுவதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதைத் தாக்குகிறது என்ற கோணத்தில் மிக அதிகமாக பிரச்சாரப்படுத்தப்படுவதுன். இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக ஈரான் செய்த அட்டூளியங்களும் செய்துவரும் அத்து மீறல்களும் மறைக்கப்படுகின்றன. இன்நிலையில் பாமரர்கள் ஈரானை ஹீரோவாக நினைக்க, படித்தவர்கள் இந்தப் பிரச்சாரத்தின் விளைவுகளை எப்படி சீர்செய்வது என்ற தயக்கத்திலும், கவலையிலும் இருந்துவருகின்றனர்.

  • Related Posts

    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), சூடான் நாட்டின் போர்ட் சூடான் (Port Sudan) நகரின் தெற்குப் பகுதியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் சீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: சூடானின் பல்வேறு…

    Read more

    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் சவுதி தேசிய நிவாரணப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) காஸா பகுதியின் பல்வேறு மாகாணங்களில் அவசரகால மனிதாபிமானப் பதிலளிப்புத் திட்டத்தின் (Urgent Humanitarian Response…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 13 views
    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 21 views
    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 15, 2026
    • 16 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    சவுதி விண்வெளி நிறுவனம் மற்றும் KAUST: அல்சைமர் நோய்க்குத் தீர்வு காண விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரியல் மாதிரிகள்

    • By Admin
    • October 15, 2026
    • 11 views

    காஸாவின் கான் யூனிஸில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அவசர உதவி

    • By Admin
    • October 13, 2026
    • 14 views
    காஸாவின் கான் யூனிஸில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அவசர உதவி

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,200 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 13, 2026
    • 14 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,200 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த சவுதி நிவாரண வாகனங்கள்