அர் ரூம் அத்தியாயத்தை வைத்து ரூம் போட முயற்சிப்பவர்களின் கவனத்திற்கு…

தற்போது சிலர் சமூக வலைத்தளங்களில் அர்ரூம் அத்தியாத்தில் வரும் ஆரம்ப சில வசனங்களை வைத்து முஸ்லிம்கள் ஈரானுக்குத்தான் ஆதரவு வழங்க வேண்டும் அது மார்க்கம் நமக்கு சொல்லும் வழிகாட்டல் அது கட்டாயம் என்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

வசனமும் வாதமும்…
‘‘அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.
சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள;.” (30.1-4)

பின்னனி…

ரோமில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள் அன்றைய காலத்தில் இருந்து வந்த மிகப் பெரும் பேர்ரசுகளான ரோமுக்கும் பாரசீகத்திற்கும் இடையில் போர் நடைபெற்றது. பாரசீகத்தில் மஜுஸிகள் நெருப்பு வணங்கிகள் வாழ்ந்து வந்தார்கள் அந்தப் போரில் கிறிஸ்தவர்களின் ரோமை நெருப்பு வணங்கிகளான பாரசீகர்கள் வீழ்த்தி வெற்றி கொண்டனர்.

அப்போது மக்கா வாசிகள் முஸ்லிம்களைப் பார்த்து உங்களைப் போன்று வேதம் கொடுக்கப்பட்டவர்களான ரோமர்களை எங்களைப் போன்ற சிலை வணங்கிகள் தோற்கடித்துவிட்டனர் இதுபோன்று நாமும் உங்களைத் தோற்கடிப்போம் என்று கூறி சந்தோசமடைந்தனர். இது முஸ்லிம்களுக்கு மிகவும் கவலையைக் கொடுத்தது.

அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கி முஸ்லிம்களுக்கு ஆறுதலலித்தான் நிச்சயமாக ரோமர்கள் வெற்றியடைவர்கள் என்றான்… அது முஸ்லிம்களுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது.

வாதம்…

அல்லாஹ் இந்த வசனத்தில் இரு குழுக்களுக்கிடையில் போராட்டம் நடக்கும்போது அவர்களில் முஸ்லிம்களுக்கு நெருக்கமான ஒரு குழுவின் வெற்றியில் முஸ்லிம்கள் சந்தோசப்படுவதில் தப்பில்லை மாறாக முஸ்லிம்கள் அவர்களுக்கே ஆதரவு வழங்க வேண்டும். எனவே, ஈரான் இஸ்ரேல் அமெரிக்க யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களான ஈரானுக்கே ஆதரவு வழங்க வேண்டும்…

விளக்கம்…

சுருக்கமாக, இந்த வசனம் இந்த யுத்தத்திற்கு பயன்படுத்த பொருத்தமற்றதாகும்…

விபரமாக…

ஒரு விடயத்தை இன்னொரு விடயத்துடன் ஒப்பிட்டு நாம் அடிப்டையில் வழங்கப்பட்ட தீர்ப்பை பிரிதொரு விடயத்திற்கு வழங்குவதாயின். ஒப்பிடுவதற்கான காரணம் அதன் தன்மை என்பன தெளிவாக பொருந்துவது அவசியமாகும்.

இந்த விதியின் அடிப்படையில் குறித்த வசனம் அதன் பின்னனி தொடர்பில் சிந்திப்போமாயின் பல விடயங்கள் புலப்படும்…

  1. ரோமர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் தொடர்பில் அல்குர்ஆன் சொல்லும்போது…
    “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்” (அல்-மாயிதா 82)
  2. கிறிஸ்தவர்கள் ஏன் அவ்வாறு முஸ்லிம்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்று குர்ஆன் சொல்லும்போது

”ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை”. (அல்மாயிதா 82)

உண்மையில் ஷாம் பிரதேசம் நபிமார்கள் அதிகம் வந்த பிரதேசமாகும், அங்கு அல்லாஹ்வுக்கு இணைவைக்காத தூய கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் பலரும், அறிஞர்களும் வாழ்ந்து வந்தனர்.

  1. கிறிஸ்தவர்களின் ஆட்சி நீதமானதாகவும் அடுத்தவர்களை மதிப்பதாகவும் இருந்தது. அவர்கள் தூரப்பிரதேசத்தில் இருந்தபோதும் மக்கா வாசிகள் வியாபாரிகள் என்பதால் அவர்கள் பற்றிய தகவல்கள் மக்காவசிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. மக்காவில் பிரபல்யமாகியும் இருந்த்து. இதனால்தான் நபியவர்கள் மக்காவில் முஸ்லிம்களுக்கு துண்பம் ஏற்பட்டபோது கிறிஸ்தவ மன்னரான நஜ்ஜாஷி அவர்கள் ஆட்சி செய்த ஹபஷாவுக்கு முஸ்லிம்களை அனுப்பிவைத்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிமில் வரும் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிகும் செய்தியும் இதை உண்மைப்படுத்துகின்றது. “சோதனையின் போது அவர்கள் அதிக பொறுமையுள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் சிறந்தவர்கள், அரசர்களின் அநீதியைத் தடுப்பதில் வேகமானவர்கள்”.

  1. அப்போது அவர்கள் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை.
  2. பிற்பட்ட காலத்தில் அவர்கள் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்தனர் அல்லது அவர்களுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்தார்கள் அதனால் முஸ்லிம்களுக்கும் அவர்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றது. முஅத்தா போர் அது போன்று தபுக் யுத்தம் போன்றவற்றை குறிப்பிடலாம்.
    எனவே, இங்கு பிற்பட்ட காலத்தில் ரோம அரசு தொடர்பிலான நிலை மாறிவிட்டது அதற்கு காரணம் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டதும் அவர்களுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்ததுமாகும்.

இந்தப் பின்னனியில் தற்போது நடைபெறும் யுத்தம் மற்றும் தொடர்புடைய நாடுகள் பற்றியும் ஈரானுக்கு நாம் ஆதரவு வழங்குவது தொடர்பிலும் ஆய்வு செய்தால்….

  1. யுதர்கள் தொடர்பில் குர்ஆன் சொல்வது தெளிவாக உள்ளது அடுத்த தரப்பான ஈரான் தொடர்பில் நாம் ஆய்வு செய்தால் ஈரான் ராபிழா இஸ்னா அஷரிய்யா கொள்கையைப் பின்பற்றும் ஒரு நாடாகும் அரசியல் அமைப்பு ரீதியாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அந்த ஆட்சியை உறுதிப்படுத்துவது அதன் தலைமையான வலி அல் பகீஹின் வேலையாகும்.

ஷீஆ இஸ்னா அஷரிய்யா ராபிழா சிந்தனைப் பிரிவு என்பது அதிகமான இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகளைக் கொண்ட ஒரு பிரிவாகும். பிரதாணமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் இந்த சிந்தனையைப் பின்பற்றுபவர்களிடம் மலிந்து காணப்படுகின்றது. அவர்கள் இறைவனை ஏற்றிருந்தாலும் அதை முறிக்கும் அதிகமான இணைவைப்புக்கள் அவர்களிடம் உண்டு. மக்காவாசிகளும் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், இப்றாஹீம் (அலை) அவர்களை நபியாக அவர்கள் ஏற்றிருந்ததோடு அவரின் மார்க்கத்தில் இருப்பதாகவே பெருமைப்பட்டுக்கொண்டார்கள். அதே நிலையைத் தான் ஷீஆக்களிடமும் காண முடிகின்றது அல்லது அதை விடவும் மோசமான ஒரு நிலை உள்ளது. இஸ்லாத்திற்கு முரணான, இஸ்லாத்திலிருந்து ஒருவரைத் தூரமாக்கும் கருத்துக்களை இஸ்லாம் என்ற போர்வையில் குர்ஆனின் போதனை என்ற பெயரில் முன்வைக்கிறார்கள் இது மக்காவாசிகளின் நிலையை விடவும் கெட்டதாகும்.

ஜாஹிலிய்யக் கால இணைவைப்பாளர்களைப் பற்றி குர்ஆன் சொல்லும்போது. ‘‘மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்பட்டவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்” (29. 65)

அதாவது இக்கட்டான நிலைகளில அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம் அழைத்தே பிரார்த்தனை செய்தார்கள். ஆனால், இங்கு நிலமை அவ்வாறில்லை இக்கட்டான நிலையில் கூட அவர்கள் ‘‘யா ஹுஸைன் ”, ‘‘யா அலி”, ‘‘யா ஹைதர்” … என்று அல்லாஹ் அல்லாதவர்களையே அழைக்கின்றனர்.

அல்லாஹ் இத்தகைய இணைவைப்பாளர்கள் பற்றி சொல்லும்போது…

‘‘நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர் ” (அல்மாயிதா 82)

எனவே, இணைவைக்கும் கொள்கையை வாழ்க்கை நெறியாக அடிப்படையாகக் கொண்ட ஒரு கூட்டம் முஸ்லிம்களுக்கு நெருக்கமானதல்ல என்பதே அல்குர்ஆனின் சிந்தனையாகும்.

எந்த மக்காவாசிகள் சந்தோசப்படுவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை அந்த நிலையில் அல்லது அதை விடவும் மோசமான நிலையிலேயே இப்போதைய ஈரானிய ஷீஆ ஆட்சி உள்ளது.

02, 03. கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு நெருக்கமாக இருக்க காணரம் அவர்களில் கற்றறிந்தவர்கள் துறவிகள், நீதியாளர்கள் இருப்பதாக குர்ஆன் சொல்கிறது. இதுவும் தற்போதய ஈரானுக்கு பொருந்தாது. ஈரான் சொந்த நாட்டில் உள்ள அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅதினர் நடத்தும் முறை நமக்குத் தெரிந்த விடயமாகும். அங்கு முக்கிய பொறுப்புக்களில் அவர்களால் இருக்க முடியாது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அஹ்லுஸ்ஸுன்னாக்கள் தொழுவதற்கு என்று பள்ளி கூட கிடையாது, ஒரு பள்ளியைக் கட்டுவதற்கு பல நாட்டுத் தூதரங்கள் முயற்சித்தபோதும் அது எட்டாக்கணியாகிவிட்டது. ஆனால் யுதர்களுக்கான பல வணக்கஸ்தளங்கள் அங்கு உள்ளது. எனவே, அடிப்படையில் வகுப்புவாரியான ஓர் நீதியற்ற அரசே அங்கு காணப்படுகின்றது. இதை கிறிஸ்தவ றோம ஆட்சியுடன் ஒப்பிடுதல் பொருத்தமற்றதாகும்.

கிறித்தவர்கள் நீதியான அடுத்தவர்களை மதிக்கின்ற அடுத்தவர்களின் உரிமைகளில் தலையிடாத ஓர் ஆட்சியை செய்வதால்தான் நபியவர்கள் மக்காவில் கஸ்டப்பட்டவர்களை அங்கு அனுப்பினார்கள். ஆனால், இன்று ஈரானில் அந்த நிலை இல்லை. அங்குள்ள அஹ்லுஸ்ஸுன்னாக்கள் அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளில் வாழ்கிறார்கள், பல நெருக்குவாரங்களை சந்திக்கிறார்கள் இந்நிலையில் வெளியிலிருந்து அஹ்லுஸ்ஸுன்னாக்கள் அங்கு செல்வது கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு விடயமாகும். அஹ்லுஸ் ஸுன்னாக்களை அரபிகளைக் கொலை செய்ய வேண்டும் என்பதை தங்கள் கொள்கையாக வைத்திருப்பவர்கள் நிச்சயம் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு நெருக்கமாக இருக்க முடியாது.

  1. ரோமர்கள் அந்த நேரம் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை. ஆனால், ஈரான் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு உதவி செய்யவில்லை முஸ்லிம்களின் ரத்தத்தைப் போக்கி தனது கோரிக்கைகளை நிறைவேற்ற சீர் செய்யவே முயற்சித்தது. கொலைகளும் அட்டூளியமும் அநியாயமுமே அதன் வரலாறு. ஈரான் முஸ்லிம்களுக்கு அன்டை நாடுகளுக்கு அநியாயம் செய்கின்ற அவர்களின் உள் விவகாரங்களில் தலையிட்டு துவம்சம் செய்கின்ற பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கும் நாடாக இருக்காவிட்டால் நிச்சயம் அதன் அண்டை நாடுகள் இந்த யுத்தத்தில் அதற்கு கைகொடுத்திருக்கும். அவர்கள் எவரும் அதற்கு கைகொடுக்கவில்லை அது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதே அதன் அநியாயத்திற்கும் நீதியற்ற வெளியுறவுக் கொள்கைக்கும் மிகப் பெரும் சான்றாகும்.
  2. ரோமர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தபோது அவர்களை முஸ்லிம்கள் எதிரிகளாகவே பார்த்தார்கள் எனவே இதுவே, இறுதியா தீர்வாக கொள்ளப்பட்டது.
    இதனோடு தற்போதய ஈரானை ஒப்பிடுகையில் எல்லா வகையிலும் முஸ்லிம்களுடன் போர்ப்பிரகடனம் செய்த ஒரு நாடாகவே அன்றிருந்து அதாவது கொமைனியப் புரட்சி காலப்பகுதியிலிருந்து இன்று வரை திகழ்கின்றது.

கொமைனியப் புரட்சியை அண்டை நாடுகளுக்கும் விஸ்தரிப்பதும் அங்கிருக்கும் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்துக்கு சார்பான ஆட்சிகளை ஷீஆ ஆட்சிகளாக மாற்றுவதும் அவர்களது கொள்கையாகும் அதனால் பல நாடுகளுக்குள்ளும் பிரச்சினையையும் பிழவுகளையும் உருவாக்கினர் அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதக் குழுக்களை பல்வேறு பெயர்களில் உருவாக்கினர், அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சிகளையும் வழங்கினர். கஃபதுல்லாஹ்வில் கூட ஆற்ப்பாட்டங்கள் செய்தனர், சீ4 ரக குண்டுகளை மக்காவில் வெடிக்க வைப்பதற்காக ஈரானிய ஹாஜிகளின் ஊடாக கொண்டுவந்தனர், மினாவில் நெரிசலை உருவாக்கி பல ஹஜ்ஜாஜிகள் மரணிப்பதற்கு காரணமானார்கள் இவை அனைத்தும் ஸவுதி ஹஜ் உம்ராவை நிருவகிப்பதற்கு தகுதியற்ற நாடு என்ற நிலையை உருவாக்கி குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும்.

கடாருக்கு எதிரான தாக்குதல்களை ஊடருப்புக்களைச் செய்தார்கள், இன்றுவரை குவைத்தில் ஹிஸ்புல்லாஹ் என்ற குழுவினூடாக அரசாங்கத்திற்கும் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கும் எதிரான அஜந்தாக்களை நிறைவேற்றுகிறார்கள். பஹ்ரைனில் ஆட்சியை மாற்ற உழைக்கிறார்கள், யெமனில் ஹுதிகளுக்கு ஆயுதம் பயிற்சிகளை வழங்கி அரசாங்கத்திற்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கினார்கள், ஈராக்கில் அமெரிக்காவின் உதவியுடன் மக்களை கொலை செய்தார்கள், லெபனானின் ஆட்சியாலரான ஹரீரியை கொலை செய்து 30வருடங்களாக ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றனர். ஸிரியாவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு கிராமமாக வேறருத்தனர். இவ்வாறு அதன் அத்துமீறல்கள் அநியாயம் தொடர்பான பட்டியல் நீண்டு செல்கிறது…

இந்நிலையில் தற்போது நடைபெறும் யுத்தத்தில் கூட அரபு நாடுகளை இலக்கு வைப்பதையும் அதன் உட்கட்டுமானங்களை அழிப்பதையும் அதன் பொருளாதார மையங்களை அழிப்பதையும் இலக்காகக் கொண்டே தாக்கி வருகின்றனர் அவர்கள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் தாக்கியதை விட பன்மடங்கு அண்டை நாடுகளையே தாக்கியுள்ளனர். அமெரிக்க இலக்குகள் என்ற போர்வையில் மக்களின் பொது இடங்கள் பொருளாதார மையங்கள் இலக்குவைக்கப்படுகின்றன.

எனவே, இத்தகையவர்கள் எந்த வகையிலும் எமக்கு நெருக்கமானவர்களாக இருக்க முடியாது இந்த வசனத்தை அவர்களுக்கு பயன்படுத்த முடியாது.

அடுத்த முஸ்லிம்களை தங்களின் அடிமைகளாகவும் மோசமான பிறப்பாகவும், அவர்களின் சொத்துக்களையும் உயிர்களையும் தங்களின் உடமைகளாக கருதும் அல்லாஹ்விற்கு இணைவைப்பதில் ஊரித்திழைத்த ஒரு கூட்டத்திற்கு புனித மிக்க அல்குர்ஆன் அர்ரூம் அத்தியாயத்தை வைத்து தங்களின் நாசகாரச் செயல்களை நிறைவேற்ற ரூம் போட்டுக்கொடுக்க நினைப்பது அபத்தமான, மிகவும் வேதனைக்குரிய, தவறான செயற்பாடாகும்.

  • Related Posts

    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), சூடான் நாட்டின் போர்ட் சூடான் (Port Sudan) நகரின் தெற்குப் பகுதியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் சீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: சூடானின் பல்வேறு…

    Read more

    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் சவுதி தேசிய நிவாரணப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) காஸா பகுதியின் பல்வேறு மாகாணங்களில் அவசரகால மனிதாபிமானப் பதிலளிப்புத் திட்டத்தின் (Urgent Humanitarian Response…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 13 views
    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 21 views
    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 15, 2026
    • 16 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    சவுதி விண்வெளி நிறுவனம் மற்றும் KAUST: அல்சைமர் நோய்க்குத் தீர்வு காண விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரியல் மாதிரிகள்

    • By Admin
    • October 15, 2026
    • 11 views

    காஸாவின் கான் யூனிஸில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அவசர உதவி

    • By Admin
    • October 13, 2026
    • 14 views
    காஸாவின் கான் யூனிஸில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அவசர உதவி

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,200 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 13, 2026
    • 14 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,200 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த சவுதி நிவாரண வாகனங்கள்