இலங்கை உட்பட120 நாடுகளுக்கு மேலாக சவூதி அரேபியாவின் ரமழான் நோன்புத் திறப்புத் திட்டம்!
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சகம் முன்னெடுக்கும் நிவாரண மற்றும் தஃவா திட்டங்களின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதத்தில் சர்வதேச ரீதியாக இலங்கை உட்பட 120 நாடுகளுக்கு மேலாக நோன்புத் திறப்பு (இஃப்தார்) ஏற்பாடுகளை சவூதி அரேபியா மேற்கொள்கிறது.
இத்திட்டமானது அந்தந்த நாடுகளின் பள்ளிவாசல்கள் மற்றும் இதர மையங்களில் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமிய நிலையங்கள் வழியாக தேவையுடையோருக்கும் இந்த உதவிகள் சென்றடைகின்றன.






