மத்திய கிழக்கு குறித்த முக்கிய உயர்மட்ட விவாதத்தில் சவுதி வெளியுறவு அமைச்சர் பங்கேற்பு!
மியூனிக்: ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில், சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்கள் கலந்துகொண்டார்.
மத்திய கிழக்கு பிராந்தியம் தொடர்பான விவாத அமர்வில் பங்கேற்ற அவர், “வேகத்தைக் கட்டியெழுப்புதல்: வாக்குறுதிகளிலிருந்து முன்னேற்றத்தை அடையும் வரை” (Building on Momentum: From Promises to Progress) என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். பிராந்தியத்தின் பாதுகாப்பு, நிலையான தன்மை சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து இந்த அமர்வில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.






