மதீனா பள்ளிவாசல்களின் பிரம்மாண்டமான நிழற்குடைகள்: பொறியியல் அதிசயமும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு இதமான சூழலும்!
மதீனா: மதீனா பள்ளிவாசல்கள் (Masjid an-Nabawi) வளாகத்தில் அமைந்துள்ள நிழற்குடைகள் வெறும் சாதாரணக் குடைகள் மட்டுமல்ல; அவை தானாகவே விரிந்து சுருங்கக் கூடிய ஒரு நவீன பொறியியல் கலைப்படைப்பாகும். இவை மதீனாவின் வெப்பத்தைத் தணிப்பதோடு, பலத்த காற்றையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் மிகப் பெரிய நகரும் நிழற்குடைகளாகக் கருதப்படும் இவை, ஆயிரக்கணக்கான தொழுகையாளிகளுக்கு அழகிய வசதியான நிழலை வழங்குகின்றன. சவுதி அரேபியாவின் இந்த மகத்தான சாதனை, பார்ப்பவர்களின் உள்ளத்தை நெகிழச் செய்வதோடு, பெரும் பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த நவீனத் தொழில்நுட்பம், பள்ளிவாசல்கள் வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு ஒரு இதமான அனுபவத்தை உறுதி செய்கிறது.






