மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ஆல் சவுத் அவர்களின் வழிகாட்டலிலும், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களின் மேற்பார்வையிலும் காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு சவுதி அரேபியா தனது நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் (KSRelief) ஊடாக வான், கடல், தரைவழியாகத் தொடர்ச்சியான உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேற்குக்கரை, காசா பகுதியில் வாழும் பாலஸ்தீனச் சகோதரர்களுக்குத் துணையாக நிற்கும் வகையில், நிலவிவரும் கடினமான மனிதாபிமானச் சூழலைக் கருத்திற்கொண்டு, சவுதி அரேபியாவின் மக்கள் நிவாரண நிதிக்கு தாராளமாகப் பங்களிக்குமாறு மன்னர் சல்மான் நிவாரண மையம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நிவாரண உதவிகளை வழங்க விரும்புவோர் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தலாம்:
* மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் ‘சாஹெம்’ (Sahem) இணையத்தளம்.
* அல்-ராஜ்ஹி வங்கியில் (Al Rajhi Bank) இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கணக்கு இலக்கம்: (SA5580000504608018899998) ஊடாக வைப்புச் செய்யலாம்.
உங்களது பங்களிப்பு ஒரு வாழ்வாதாரம்; உங்களது உதவி அவர்களுக்குப் புதிய நம்பிக்கையை வழங்கும்.






