பிரித்தானிய – சவுதி உறவு:
இளவரசர் வில்லியம் கையில் பிரித்தானிய பொருளாதாரத்தின் எதிர்காலம்?
பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம், சவுதி அரேபியாவின் மகுட இளவரசர் முகம்மது பின் சல்மானின் நன்மதிப்பைப் பெறுவதில் வெற்றி பெற்றால், அது பிரித்தானிய பொருளாதாரத்திற்கு ஆழமான ஆதாயங்களை ஈட்டித் தரும் என்று பிரித்தானியாவின் “The Week” இதழ் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பொருளாதார நலன்களைக் கருத்திற்கொண்டு, இந்த இரு நாட்டு இளவரசர்களுக்கும் இடையிலான உறவுமுறை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்புகள் அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






