மக்கா,மதீனா: புனித நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் ஹரமைன் அதிவேக ரயில் அடுக்கில் 20 புதிய ரயில்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கென ஸ்பெயின் நாட்டின் தல்கோ நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், இந்த ரயில்கள் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ரயில்களின் வருகையோடு ஹரமைன் அதிவேக ரயில் சேவையின் மொத்த எண்ணிக்கை 55 ஆக உயர்வடையும். ஒவ்வொரு ரயிலும் 13 பெட்டிகளைக் கொண்டு அமைந்திருக்கும் நிலையில், அவற்றில் 8 பெட்டிகள் சாதாரண வகுப்புப் பயணிகளுக்காகவும் 5 பெட்டிகள் வர்த்தக வகுப்புப் பயணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட இருக்கை வசதிகள் கொண்ட பிரத்யேக பெட்டியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்கள் அமைந்துள்ள புனித நகரங்களுக்கு வருகை தரும் இறைநேச விருந்தினர்களுக்கு (ضيوف الرحمن) உயர்தரமான சேவைகளை வழங்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.






