அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர், சற்று முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டார்.
அதன்படி, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அவர்கள், ஜனாதிபதி டிரம்பிடம் “சூடானில் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று நேரடி கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சூடான் மக்களின் நலன் கருதி, அங்கு அமைதியை நிலைநாட்ட சவூதித் தலைமை மேற்கொண்டு வரும் தீவிர இராஜதந்திர அழுத்தத்தை இது வெளிப்படுத்துகிறது.






