156 நாடுகளுக்கு ரமலான் உணவுப் பொதிகள்: சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் பிரம்மாண்டத் திட்டம்.
ரியாத்: புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, சர்வதேச அளவில் 156 நாடுகளில் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் மாபெரும் திட்டத்தை சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான பணிகள் மையம் (KSrelief) தொடங்கியுள்ளது.
இந்த உணவுப் பொதிகள், ரமலான் மாதம் முழுவதும் ஒரு குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உள்ளடக்கியுள்ளன. இத்துடன், பயன் பெறும் நாடுகளில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு 145 வகையான மருந்துகள் உட்படப் புதிய மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இந்த மருத்துவ உதவிகளின் மொத்த மதிப்பு $10,000,000,000 ஆகும்.
பயன்பெறும் நாடுகள்:
யேமன், பாலஸ்தீனம், சிரியா, சோமாலியா, துனிசியா, லெபனான், ஈராக், எகிப்து, ஜோர்டான், லிபியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நைஜீரியா, நைஜர், ஜிபூட்டி, மொரிட்டானியா, எரித்திரியா, சூடான், போஸ்னியா, கொசோவோ, அல்பேனியா, ஆப்கானிஸ்தான், சாட் போன்ற நட்பு நாடுகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றன.






