சர்வதேச ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், மனிதாபிமான ரீதியிலான துரித நடவடிக்கைகளின் திறனை மேம்படுத்தவும் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவி மையம் (KSrelief), ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகத்துடன் (OCHA) இணைந்து ஒரு முக்கிய ஆலோசனை அமர்வை ரியாத்தில் நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனிதாபிமான செயல்பாடுகளின் பொதுவான கண்ணோட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் மனிதாபிமான தேவைகள் அதிகரித்து வரும் சூழலில், உதவிப் பணிகளை மிகவும் சீராகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் இதில் முன்வைக்கப்பட்டன.
மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் இடங்களுக்குச் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யவும், உலக நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை ஒருமுகப்படுத்தவும் இந்த அமர்வு ஒரு முக்கிய தளமாக அமைந்தது.






