சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களைச் சந்தித்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து.
சவுதி பிரதமரும் பட்டத்து இளவரசருமான மேதகு முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவுத் அவர்கள், ரியாத்தில் உள்ள அல்-யமாமா மாளிகையில், சவுதி அரேபியாவின் தலைமை முஃப்தி, அரச குடும்பத்தினர், கௌரவத்திற்குரிய உலமாக்கள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்களை வரவேற்றார்.
புனித ரமழான் மாதத்தின் வருகையை முன்னிட்டு பட்டத்து இளவரசர் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக அவர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில், அனைவரும் புனித அல்குர்ஆன் வசனங்களைச் செவிமடுத்தனர். அதனைத் தொடர்ந்து, வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களை பட்டத்து இளவரசர் அவர்கள் கைலாகு செய்து வரவேற்றார்.
வருகை தந்தவர்களின் ரமழான் வாழ்த்துகளைப் பதிலுக்குப் பரிமாறிக் கொண்ட பட்டத்து இளவரசர் அவர்கள், அனைவரினதும் நோன்பு, வணக்கம் மற்றும் நற்செயல்களை இறைவன் அங்கீகரிக்க வேண்டுமென்றும், இரு புனிதத் தலங்களின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவுத் அவர்களின் தலைமையில் நமது அருமைத் தேசத்தின் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் நீடிக்க வேண்டுமென்றும் பிரார்த்தித்தார்.
https://web.facebook.com/share/p/14XWUxpZoyd






