எத்தியோப்பியா சென்றடைந்தார் சவுதி வெளியுறவு அமைச்சர்: பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த உத்தியோகபூர்வ விஜயம்.
அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் இன்று அந்நாட்டை சென்றடைந்தார்.
எத்தியோப்பியாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரடி மேற்பார்வையில், சூடான் விரைவு ஆதரவுப் படைகளுக்கான (RSF) பிரத்யேக பயிற்சி மையம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சவுதி வெளியுறவு அமைச்சரின் இந்த எத்தியோப்பிய விஜயம் சர்வதேச ரீதியாக பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதுடன், பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இந்த விஜயத்தின் போது விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






