ரியாத் பிராந்தியத்தின் ஆளுநர், அதிமேதகு இளவரசர் பைசல் பின் பந்தர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் நேற்று மாலை நடைபெற்ற “இஸ்லாமிய விழுமியங்கள் மாநாட்டின்” (Islamic Values Forum) முதல் பதிப்பைத் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு வழிகாட்டல் அமைச்சகத்தால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு ஷேக் டாக்டர் அப்துல்லத்தீப் பின் அப்துல்அஜிஸ் ஆல் அல்-ஷேக் அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், ரியாத்தில் உள்ள இன்டர் கான்டினென்டல் ஹோட்டலில் இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
சமூகத்தில் இஸ்லாமிய நற்பண்புகளை வளர்ப்பதற்கும் சர்வதேச அளவில் இஸ்லாமிய விழுமியங்களின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதற்கும் இந்த மாநாடு ஒரு முக்கிய தளமாக அமையும்.
உயரிய நோக்கங்களுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாட்டில் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






